டெல்அவிவ், மே 20–
மீண்டும் தொடங்கியுள்ள இஸ்ரேல் தாக்குதலால் 436 பேர் கொல்லப்பட்ட நிலையில், காசா முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடாவடியாக அறிவித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7- ஆம் தேதி முதல் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இஸ்ரேல் – காசா இடையேயான முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மார்ச் 1 ந்தேதி முடிவுக்கு வந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்த காலத்தை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கலாம் என்று அமெரிக்கா யோசனை தெரிவித்தது. இதனை நிராகரித்துவிட்ட ஹமாஸ் அமைப்பு, தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கவும் மறுத்துவிட்டது.
தாக்குதலால் 436 பேர் பலி
அதைத் தொடர்ந்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. கடந்த மார்ச் 19ஆம் தேதி காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 436 பேர் கொல்லப்பட்டனர். இதன் பின்னரும் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. தற்போது, காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள நெதன்யாகு, ஹமாஸ் மீதான தாக்குதல் நடவடிக்கை விரிவாக்கப்பட்டுள்ளதாகவும், தாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் கூறியுள்ளார். மேலும், காசா முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் எனவும் அவர் அடாவடியாக தெரிவித்துள்ளார்.
![]()





