காசா, அக். 11–
காசாவில் இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 28 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
காசாவில் ஓராண்டாக ஹமாசுக்கு எதிராக போர் புரிந்து வரும் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஒருவாரமாக தாக்குதலை மீண்டும் தீவிரமாக்கி உள்ளது. இந்நிலையில், டெய்ர் அல் பலா நகரில் இடம்பெயர்ந்த மக்களுக்கான தங்கும் முகாமாக செயல்பட்டு வந்த பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தை, 7 பெண்கள் உட்பட 28 பேர் பலியாகினர். 54 பேர் படுகாயமடைந்தனர். இப்பள்ளியில் பொதுமக்களுக்கு மத்தியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது.
தாக்குதல்கள் தொடர்ச்சியாக நிகழ்கின்றன, அவற்றில் பெரும்பாலானவை குடியிருப்பு பகுதிகள் மற்றும் தங்குமிடங்களை குறிவைத்து வருகின்றன. “ஜபாலியா பகுதி முழுவதையும் காலி செய்யுமாறு இஸ்ரேலியர்கள் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர், இருப்பினும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்தில், அழிக்கப்பட்ட வீடுகளிலோ அல்லது தங்குமிடங்களிலோ உள்ளனர்.”
இஸ்ரேல் குண்டுவீச்சு
“அல்-ஷிஃபா மருத்துவமனையில் செய்ததைப் போலவே, இரு மருத்துவமனைகளையும் இடிபாடுகளாக மாற்றுவதாக இஸ்ரேலியர்கள் பலமுறை மிரட்டிய போதிலும், கமல் அத்வான் மற்றும் அல்-அவ்தா மருத்துவமனைகள் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்கின்றன.” காசாவில் இயங்கி வரும் சில மருத்துவமனைகளை பராமரிக்கவும், இஸ்ரேலியர்களின் குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குறைந்தபட்ச சுகாதார சேவைகளை தொடர்ந்து வழங்கவும் உலக சமூகத்தை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பலியானவர்களின் உடல்கள் சிதைந்து, தெருநாய்களால் உண்ணப்படும் அவலம் நிகழ்ந்து வருகிறது. மேலும் இதில், பலர் படுகாயமடைகின்றனர். எனவே மருத்துவமனை சேவைகள் நிறுத்தப்பட்டால் அது பேரழிவாக மாறும் நிலை உருவாகும்.’நாங்கள் உலகிற்கு முறையிடுகிறோம். நாங்கள் இறந்து கொண்டிருக்கிறோம்’ என ஒருவர் கதறினார். இதுதவிர, லெபனானில் ஐநா அமைதி காக்கும் படையின் 3 நிலைகள் மீதும் இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் 2 அமைதி காக்கும் படையினர் காயமடைந்ததாகவும் ஐநா அதிகாரி தெரிவித்தார்.
ஜியோனிஸ்டுகள் கேவலமான ஜென்மங்கள், விடுதலை போராட்ட குழுக்களை நேராக எதிர்க்க வக்கில்லாத பேடி பயல்கள்.
அருகில் உள்ள அரபு நாடுகள் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் நமக்கென்ன என்று சும்மா இருக்கிறார்கள். கூடியவிரைவில் இஸ்ரேலுக்கு எதிரான முடிவு எடுக்க வேண்டி வரும்.
அமெரிக்கா இஸ்ரேல் தீவிரவாதிகளுக்கு ஆயுத உதவி செய்து வருகிறது கூடிய விரைவில் அமெரிக்கா மக்கள் எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.