சென்னை, டிச.9–
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:–
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவருமான சோனியா காந்திக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
எதிர்வரும் ஆண்டு அவருக்கு மகிழ்ச்சியான நலமான ஆண்டாக அமைய விழைகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.