செய்திகள்

காங்கிரஸ் குழுவினருடன் ராகுல் காந்தி இன்று சந்திப்பு

புதுடெல்லி,ஆக.30–

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் போர் விமானம் தொடர்பாக காங்கிரஸ் குழுவினரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

பாரதீய ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ரபேல் போர் விமானம் தொடர்பான ஊழல் குறித்து ஆலோசிக்கவும், ரபேல் போர் விமானம் தொடர்பான உண்மை நிலையை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்தது.

இந்த ஆலோசனை கூட்டம் கடந்த 17 -ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணத்தால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் போர் விமானம் தொடர்பாக காங்கிரஸ் குழுவினரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், பாரதீய ஜனதா ஆட்சியின் பெரிய ஊழலாக கருதப்படும் ரபேல் ஊழல் குறித்து நாட்டு மக்களிடம் விரிவாக விளக்க உள்ளோம். கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடியின் வீட்டை இளைஞர் காங்கிரசார் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *