டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு
டெல்லி, ஏப். 09–
தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு மேலும் 14 நாட்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஐதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி ரோஸ் அவனீவ் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
14 நாட்கள் நீட்டிப்பு
இதனிடையே டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கவிதாவை, 15 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது. இந்நிலையில் கவிதாவுக்கு மேலும் 14 நாட்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி வரை கவிதாவின் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.