செய்திகள்

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் அரசியல் பற்றி பேசினேன்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை, ஆக. 8–

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் அரசியல் பற்றி பேசினேன், ஆனால் அதை பற்றி இப்போது சொல்ல முடியாது என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் 2 நாள் பயணமாக டெல்லி சென்றடைந்திருந்தார். டெல்லி பயணத்தின் ஒரு அங்கமாக சந்திரபாபு நாயுடுவையும் சந்தித்தார். இதனிடையே நேற்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார்.

இந்நிலையில் இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்புக்குப் பிறகு ரஜினிகாந்த் போய்ஸ் இல்லத்தின் வாயிலில் செய்தியாளர்களை சந்தித்தார். கவர்னருடனான சந்திப்பு குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

அப்போது நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:–

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கவர்னருடன் 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

காஷ்மீரில் பிறந்து வட இந்தியாவில் வளர்ந்தவர் கவர்னர். தமிழகத்தை மிகவும் நேசிக்கிறார். தமிழக ஆன்மீக உணர்வு கவர்னரை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நேர்மை, தமிழர்களின் கடின உழைப்பு, அவர்களின் ஹானஸ்டியை பிடித்திருப்பதாக கவர்னர் கூறினார்.

தமிழ்நாட்டிற்கு தன்னால் முடிந்த அளவுக்கு நல்லது செய்ய தயாராக இருப்பதாக கவர்னர் என்னிடம் கூறினார். கவர்னரிடம் அரசியல் பற்றி பேசினேன்; ஆனால் அதை பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது என்றார்.

மீண்டும் அரசியலுக்கு வரப்போகிறீர்களா? என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, மீண்டும் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்று நடிகர் ரஜினி பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜிஎஸ்டி குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் பற்றி விவாதித்தீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது பற்றி எதுவும் சொல்ல முடியாது என்று பதிலளித்தார்.

ஜெயிலர் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15 அல்லது 25–ந்தேதி தொடங்கும் என்று ரஜினி கூறினார்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்த் சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கவர்னர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.