செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 3 பயணிகள் பலி

Spread the love

விழுப்புரம், ஜூன் 13–

கள்ளக்குறிச்சி அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

சென்னையில் இருந்து நேற்றிரவு கோயம்புத்தூருக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. அந்தபஸ்சை டிரைவர் செல்வம் ஓட்டினார். இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் பிரிதிவிமங்கலம் பைபாஸ் மேம்பாலம் அருகில் அந்த பஸ் வந்து கொண்டிருந்த போது, சாலையோரம் நின்றிருந்த இரும்புகம்பி ஏற்றிய லாரி திடீரென சாலையில் ஏறியது. இதனை பார்த்த டிரைவர் செல்வம் பஸ்சை திருப்ப முயன்றார். அப்போது அவரது கட்டுபாட்டை இழந்த பஸ், அந்த லாரி மீது பயங்கரமாக விபத்துக்குள்ளானது. இதில் பஸ்ஸின் இடது பக்கம் பலத்த சேதம் அடைந்து அதில் அமர்ந்திருந்த மூன்று ஆண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

தகவல் கிடைத்ததும் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி .ராமநாதன் உத்தரவின் பேரில் தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் இறந்தவர்கள் ஈரோடு, பவானி மெயின்ரோட்டில் வசிக்கும் முகமது ஜுல்பர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், என்பது தெரியவந்தது. மற்றொருவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *