செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சப்–இன்ஸ்பெக்டர் மகன் பலி

விழுப்புரம்,செப்.16-

கள்ளக்குறிச்சி எம்.ஆர்.எப். நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் (வயது 57). இவர் கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் கோகுலகிருஷ்ணன்(26). என்ஜினீயர். இவர் மோட்டார் சைக்கிளில்

கோமுகி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் சரவணன் என்பவர் வேகமாக வந்தார். இதில் எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயமடைந்த கோகுலகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கோகுலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *