செய்திகள்

களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றும் முதலமைச்சர் பற்றி பேச ஸ்டலினுக்கு ஒரு அருகதையும் கிடையாது

களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றும் முதலமைச்சர் பற்றி பேச ஸ்டலினுக்கு ஒரு அருகதையும் கிடையாது

அமைச்சர் கே.சி வீரமணி தாக்கு

 

திருப்பத்தூர், ஜூலை 6–

மக்களை ஏமாற்ற வீட்டின் இருட்டு அறையில் அமர்ந்து பொய் அறிக்கைகளை வெளியிடம் ஸ்டாலின் எங்கே? களத்தில் இறங்கி மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று மக்கள் பணியாற்றும் முதலமைச்சர் எங்கே? என்று அமைச்சர் கே.சி. வீரமணி வாணியம்பாடி தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க, வேலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான கே.சி. வீரமணி தலைமையில் வாணியம்பாடி தலைமை அலுவலகத்தில் வேலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு வேலூர்மேற்கு மாவட்ட துணைச் செயலாளரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் நிலோபர் கபில் முன்னிலை வகித்தார். வேலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி. சதீஷ் குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி. வீரமணி பேசியதாவது:

தி.மு.க. என்ற கட்சி கூலி ஏஜென்டுகளை நம்பி பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு கட்சி நடத்துகிறது. ஆனால் அண்ணா தி.மு.க. என்ற பேரியக்கம் உணர்வுபூர்வமாக கழகத் தொண்டர்களை வைத்துக்கொண்டு அவர்களின் ஆலோசனைப்படி கட்சியை சிறப்பாக செயல்படுத்தி மக்கள் பணி செய்துவருகிறது.

எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வீட்டில் இருட்டு அறையில் உட்கார்ந்து கொண்டு பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு கபட நாடகம் ஆடி மக்களை ஏமாற்றி வருகிறார் . ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி களத்தில் இறங்கி மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று மக்களின் நலனுக்காக பணியாற்றி வருகிறார். இருட்டறை பொய் அறிக்கை ஸ்டாலினுக்கு, களத்தில் இறங்கிமக்கள் நலனுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பற்றி பேச எந்த ஒரு அருகதையும் கிடையாது.

எதிரிகளின் பொய்யான செய்திகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சிறப்பாக செயல்பட வேண்டும். தலைமை அறிவிப்பின்படி ஒன்றிய, நகரம் ,பகுதி ,பேரூராட்சி கழகத்திற்கு 14 பேரும், ஊராட்சி, வார்டு வட்டம் ஆகியவற்றிற்கு ஒருவரை செயலாளராகவும் கழகப் பணிகளை மிகுந்த ஆர்வத்தோடும், துடிப்போடும் செயல்படுத்தும் வகையில் இளைஞர்களை தேர்வு செய்யப்பட வேண்டும். வருகின்ற தேர்தலில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணிகள் முக்கிய பங்கு வகிக்கும்.

அமைச்சர் கே.சி.வி. வீரமணி பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி. சம்பத்கமார், நகர செயலாளர் ஜி-சதாசிவம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ஆர்.வி. குமார், உதயேந்திரம் பேரூராட்சி கழகச் செயலாளர் பிச்சாண்டி, ஒன்றிய பேரவை செயலாளர் ஜெயசக்தி, பேரூராட்சி கழக செயலாளர் டி.பாண்டியன், நகர பொருளாளர் தன்ராஜ், முருகவேல், பரமசிவம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் வி.எல். ராஜன், துணைத்தலைவர்கள் ஆனந்தபாபு, சரவணன், துணைச் செயலாளர்கள் பவள ராஜன், குமரேசன், ராம்குமார், பிரகாஷ், யுவராஜ், பொருளாளர் நித்யானந்தம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *