செய்திகள்

கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவர் பரிவர்த்தனை: வி.ஐ.டி – பெல்ஜியம் பல்கலைக்கழகங்கள் ஒப்பந்தம்

வேலூர், மே. 15–
கல்வி, ஆராய்ச்சி பணிகள், மாணவர்கள், பேராசிரியர்கள் பரிவர்த்தனை மற்றும் இரட்டை பட்டம் வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ள வி.ஐ.டி மற்றும் பெல்ஜியம் நாட்டின் கேயு லியுவென் பல்கலைக்கழகங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வி.ஐ.டி துணைத்தலைவர் டாக்டர் சேகர் விசுவநாதன், கேயு லியுவென் பல்கலைக்கழக ரெக்டர் பேராசிரியர் லுக் ஷெல்ஸ் ஆகியோர் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாட்டின் லியுவென்னில் அமைந்துள்ள கேயு பல்கலைக்கழகம் (KU Leuven) என்கிற கத்தோலிக்க பல்கலைக்கழகம் (Ketholieke University, Leuven) 600 ஆண்டுகளுக்கு முன்பு 1425–ம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலகில் பழமையான ஒரு முன்னணி பல்கலைக்கழகமாகும்.
இந்த பல்கலைக்கழகத்துடன் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் இணைந்து ஆராய்ச்சி பணிகள், கல்வி, மாணவர் மற்றும் பேராசிரியர்கள் பரிவர்தனைக்காக ஒப்பந்தம் செய்துள்ளன.
மேலும் இந்த இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து மின் பொறியியல், இயந்திரவியல் பொறியியல், தகவல் தொடர்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவற்றில் தனித்தனி பட்டங்கள் வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ள உள்ளன. இந்த இருபல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து நடத்திய ஆராய்ச்சிகள் சம்மந்தமான ஆராய்ச்சி இதழ்கள் வெளியிடவும் முடிவு செய்துள்ளன.
அண்மையில் கேயு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வி.ஐ.டி துணைத் தலைவர் டாக்டர் சேகர் விசுவநாதன் கேயு பல்கலைக்கழகத்தின் ரெக்டர் பேராசிரியர் லுக் ஷெல்ஸ்மிகுல் ஆகியோர் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வி.ஐ.டி நிர்வாக இயக்குனர் சந்தியா பெண்ட்டரெட்டி மற்றும் கேயு பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *