செய்திகள்

கல்வியில் சாதிக்கும் சென்னை

Makkal Kural Official

தலையங்கம்


சென்னையும் தமிழ்நாடும் உயர்கல்வியில் ஒப்பில்லா பெருமை பெற்றுத் திகழ்கிறது.

தமிழ்நாட்டின் கல்வி மரபு – ஐந்தாயிரம் ஆண்டுக்கு முந்திய முதற்தமிழ் சங்கம், இரண்டாம் தமிழ் சங்கம் , மூன்றாம் தமிழ்சங்கம் காலத்தில், முற்காலச் சோழரான திருமாவளவன் கரிகால்சோழன் காலத்தில், இடைக்காலமான களப்பிரர் காலத்தில், பிற்கால சோழர்களில் சிறந்த ராஜராஜன் ராஜேந்திர சோ தலைமகனானன் காலத்தில் உலகமே உற்றுக் கவனித்த நமது கல்விச் செல்வச் சிறப்புகளை மீண்டும் அரங்கத்தில் கொண்டுவந்து நிறுத்தியதாகும்.

அந்த உலக அங்கீகாரம் இன்று சென்னையின் கல்வித் துறையில் செய்துவரும் சாதனைகள் மூலம் மேலும் உயர்ந்து நிற்கிறது.

சென்னைப் பல்கலைக்கழக ஆளுகையில் உள்ள கல்லூரிகள் , சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரிகள், சென்னை ஐஐடி,

சென்னை மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட எயர் கல்விச் சாலைகள், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், கணித அறிவியல் நிறுவனம், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், தமிழ் இணைய கல்விக்கழகம் ஆகியவை சென்னையின் கல்வி மேம்பாட்டில் முத்திரை பதித்துள்ள தேசிய கல்வி நிறுவனங்களாகத் திகழ்கின்றன.

“கல்வியில் சிறந்த தமிழ்நாடு, உயர்கம்பன் பிறந்த தமிழ்நாடு,” என்றார் மகாகவி பாரதி. சென்னை, தமிழ்நாட்டின் தலைநகராக, இந்த கல்லூரிகளின் மூலம் அதை உறுதிப்படுத்துகிறது. சென்னைக்கு உள்ள பல பெருமைகளில் கல்விக் கட்டுமானத்தில் செய்திருக்கும் சாதனை அபாரமானது,

தரமான உயர் கல்விக்கான முகமாக சென்னை உயர உயர்கல்வி கட்டமைப்பில் செய்து வரும் சாதனைகள் இந்த நகரத்திற்கு மாபெரும் பெருமையை சேர்க்கின்றன.

தரமான உயர் கல்விக்கான மையமாக சென்னை உயர்ந்து, தலைநிமிர்ந்து சர்வதேச அளவில் வெற்றி நடை போடுகிறது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு (National Institutional Ranking Framework) ஆண்டுதோறும் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறது. 2024-ம் ஆண்டுக்கான பட்டியல் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியிடப்பட்டது. கற்றல், கற்பித்தல், உள்கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி மற்றும் உருவாக்கப்படும் பட்டதாரிகளின் நிலையை கணக்கில் கொண்டு, கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் இடம் பெறுகின்றன.

இந்நிலையில், சென்னையின் ஐஐடி (IIT Madras) தேசிய அளவில் ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களின் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. 2019 முதல் தொடர்ந்து இந்த உயரிய இடத்தை கைப்பற்றியுள்ள சென்னை ஐஐடி, கல்வியில் சென்னை நகரத்தின் மேன்மையை அடையாளமாக்கியுள்ளது.

சென்னையின் கல்வி சாதனைகள், அதன் அடையாளங்களை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. நாட்டின் கல்வி தரத்திற்கான மையமாக விளங்கும் சென்னை, நவீன காலத்திலும் தன்னை உயர்வாக நிலைநிறுத்தி வருவது, தமிழ்நாட்டின் கல்வி பெருமைக்கு ஒரு முத்திரையாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *