செய்திகள்

கல்லூரி மாணவர்களின் ‘ ஐ லவ் ஓட்டு’ விழிப்புணர்வு

வேலூர், மார்ச் 15

வேலூர் மாவட்டத்தில் 100 சதவிகித வாக்களிக்க கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ‘ ஐ லவ் ஓட்டு’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்­டர் ராமன் பங்கேற்­றார்.

வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2019 முன்னிட்டு தோ்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் அனைத்து துறைகளின் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் ஆபிசர் லைன் ஊரிசு கல்லூரியின் டி.போர் மைதானத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியினர், மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவ மாணவிகள் என 500 பேர் கலந்துக்கொண்ட ‘ஐ லவ் வோட்’ (I LOVE VOTE) என்ற பெ­ரிய வாசகத்தில் நிற்கும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்­டர் ராமன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்­டர் பேசியதாவது:

நமது ஐனநாயகத்தின் முக்கிய நிகழ்வான தேர்தலை நோ்மையாக நடத்தி அதன்வாயிலாக அரசு அமைக்க தேர்தல் ஆணையம் பணியாற்றுகிறது. இந்த தேர்தலை சிறப்பாகவும் நேர்மை யாகவும் நடத்திட நாம் அனைவரும் இணைந்து செயலாற்றிட வேண்டும். இது நமது கடமையும் உரிமையும் ஆகும். தகுதியுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.

தேர்தல் பல்வேறு வகையில் வாக்கு சீட்டு முறையிலிருந்து தற்போது மின்னணு வாக்கு இயந்திரம் யாருக்கு வாக்களித்தோம் என்ற தகவலை உறுதி படுத்திக் கொள்ளும் வகையில் நவீன வசதிகள் வரை வளர்ந்து வந்துள்ளது. இந்த முறைகளை இளைஞர்கள் தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும். இதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குபதிவு நடைப்பெறும் வகையில் உங்களுடைய ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.

இவ்­வாறு மாவட்ட கலெக்­டர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் வேணுசேகரன், சத்துவாச்சாரி பளுதூக்கும் வீரர் சி.சதீஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *