செய்திகள்

கல்லூரிகளில் ஆகஸ்ட் 1ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை

சென்னை, ஜூலை.2-

கல்லூரிகளில் ஆகஸ்ட் 1ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நடத்திய கூட்டத்தில் துணைவேந்தர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது என்றும் ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் மாணவர் சேர்கையை துவங்குவத்ற்கு முன் அனைத்து பல்கலைக்கழகங்களும் தேர்வு முடிவுகளை வெளியிட கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றது என்றார்.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை பற்றிக் கூறுகையில் பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளிலும், 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

கல்லூரி 2ம் ஆண்டு, 3ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் நடப்பு ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒற்றைச்சாளர முறையில் கடந்த ஆண்டு எப்படி நடத்தப்பட்டதோ அதேபோல்தான் நடைபெற உள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் பணி வழக்கம்போல் நடந்து கொண்டு இருக்கிறது.

மேலும் 3 பல்கலைக்கழகங்களில் உள்ள முறைகேடுகள், குறைபாடுகள் குறித்து ஆராய குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளன.

சென்னை பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் எம்.பில். பாடம் நீக்கப்பட்டது. அதுதொடர்பாக இருவேறு கருத்துகள் வெளியான நிலையில் தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களும் எம்.பில். பாடத்திட்டத்தை தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை இல்லை என்றாலும் எம்.பில். படிப்பை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *