வாழ்வியல்

கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கும் முலாம்பழம் ஜூஸ்

முலாம்பழத்தின் தாவரவியல் பெயர் குக்குமிஸ் மெலா என்பதாகும்.

இது மஞ்சள், சிவப்பு, வெள்ளை என பல நிறங்களில் காணப்படுகிறது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விதைக்கப் பட்டு, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாத காலங்களில் அறுவடை செய்யப்படுகிறது.இதன் மருத்துவ பயன்கள் வருமாறு:–

முலாம்பழம் பழச்சாறு குடித்தால்

கண் எரிச்சல், கண் சூடு போன்றவை குறைந்து கண் குளிர்ச்சி பெறும். கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கும். பழச்சாறு தாகம் தீர்த்து தொண்டை வலியை குணப் படுத்தும். வேர்க் கசாயம் வாந்தியை நிறுத்தும். இருமல், ஆஸ்துமாவை குணப்படுத்தும்.

முழாம்பழச்சாறுடன் இனிப்பு கலந்து உண்டால் சொறி, சிரங்கு நீங்கும். பால் சுரப்பை அதிகரிக்கும். பழத்தை கூலாக்கி எக்சிமா எனப்படும் தோல் நோய் மேல் தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும். மலச்சிக்கல் நீங்கும். சிறுநீரகக் கோளாறுகள், நீர்க் கடுப்பு போன்றவை குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *