வர்த்தகம்

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ரெலா மருத்துவமனை சாதனை

ரெலா மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்து வருகிறது.

கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் உலக அளவில் 90 சதவீதம் பேர் உயிர் பிழைக்கின்றனர். ஆனால் ரெலா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் 99.2 சதவீதம் பேர் உயிர் பிழைத்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவல் காலத்திலும் இம்மருத்துவமனை இந்த சிகிச்சையை சிறப்பாக மேற்கொண்டுள்ளது. மேலும் உலக அளவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறந்த மருத்துவமனையாக இது அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இது குறித்து ரெலா மருத்துவமனை தலைவர் முகமது ரெலா தெரிவித்ததாவது:–

நாங்கள் சரியான திசையில் பயணிக்கிறோம். இந்த சிகிச்சை முடிவுகளால் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் உலக அளவில் உயிர் பிழைப்போரின் எண்ணிக்கை 90 சதவீதமாக உள்ளது.

தொழில்நுட்ப மேம்பாடு

உலகத் தரத்துடன் எங்கள் மருத்துவமனையை ஒப்பிடுகையில் இந்த சதவீதமானது அதிகமாக உள்ளது.

முந்தைய காலங்களில் கல்லீரல் மாற்று சிகிச்சை தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் நோயாளிகளுக்கும் அதற்கு பரிந்துரை செய்யும் மருத்துவர்களுக்கும் இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொழில்நுட்பமானது மேம்பாடு அடைந்துள்ளது.

அறுவை சிகிச்சைக்குக் பின் உலக அளவில் 90 சதவீதமாக உள்ள உயிர் பிழைப்போரின் எண்ணிக்கையானது ரெலா மருத்துவமனையில் 99.2 சதவீதமாக உள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என நான் நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்துப் பேசிய ரெலா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி இளங்குமரன், கல்லீரல் மாற்று சிகிச்சையில் எங்கள் மருத்துவமனையின் செயல்பாடானது ஆண்டுக்கு ஆண்டு நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. நோயாளியை நல்ல முறையில் கவனித்தல், புதுமையான சிகிச்சை முறைகள் மற்றும் சிக்கலான பிரச்சினைகளுக்கு ஒரு செயல்திறன்மிக்க இடைநிலை பராமரிப்புத் திட்டம் ஆகியவற்றால் நாங்கள் இந்த வெற்றியை எட்டியுள்ளோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *