பசுமைப் புரட்சியில் புதிய சாதனை
ஆர். முத்துக்குமார்
பசுமை புரட்சி , அதாவது பருவநிலை மாற்றத்தை தடுக்கும் முயற்சியில் நாடுகள் குறைவான கார்பன் உமிழ்வை (carbon emissions) கொண்ட ஆற்றல் வழிகளைத் தேடி வருகின்றன. இதன் ஒரு முக்கியமான பகுதியாக அணு மின் தயாரிப்பு (nuclear power) முன்னிலையில் இருக்கிறது.
மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய பொறுப்புள்ள அணுசக்தி என்ற முறையில் அணுசக்தி மற்றும் கதிரியக்கப் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் மின்சாரம் மற்றும் மின்சாரம் சாராத துறைகளில் அணுசக்தி தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது.
அணுசக்தித் துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கான புதுயுக முயற்சியாக தமிழகத்தின் கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 எம்டபிள்யூஇ சோடியம் – குளிரூட்டப்பட்ட வேகப் பெருக்கி உலையை (Prototype Fast Breeder Reactor – PFBR) இயக்கும் திட்டத்திற்கு அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் (ஏஇஆர்பி) (Atomic Energy Regulatory Board – AERB) ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக வணிக ரீதியாக செயல்படும் இவ்வகை விரைவு அணு உலையை கொண்டிருக்கும் இரண்டாவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை இந்த விரைவு உலை ஒரு மேம்பட்ட மூன்றாம் தலைமுறை உலை ஆகும். இது அவசரநிலை ஏற்பட்டால் ஆலையை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் மூடுவதை உறுதி செய்யும் உள்ளார்ந்த செயல்மிக்க பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. முதல் கட்டத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பயன்படுத்துவதால் அணுக் கழிவுகள் உருவாகுவது கணிசமான குறையும் என்ற வகையில் விரைவு ஈனுலை பெரும் நன்மையை வழங்குகிறது. இதன் மூலம் பெரிய புவி சார்ந்த அகற்றல் வசதிகளின் தேவை தவிர்க்கப்படுகிறது.
கோர் லோடிங் பணி முடிந்ததும் முக்கியமான நிலைக்கான முதல் அணுகுமுறை நிறைவடையும், இது பின்னர் மின் உற்பத்திக்கு வழிவகுக்கும்.
இந்தத் திட்டம் இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என ஏஇஆர்பி தெரிவித்துள்ளது. இந்திய அணுசக்தி துறையில் இது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் என மதிக்கப்படுகிறது. 500 எம்டபிள்யூ சக்தியை உருவாக்கும் இந்த உலையை செயல்படுத்துவதற்கு ஏஇஆர்பி வழங்கிய அனுமதி எதிர்கால அணுசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முக்கிய பங்கு வகிக்கும்.
அதன் சிறப்பம்சங்கள்:
P F B R என்பது பாரம்பரிய அணு உலைகளுடன் ஒப்பிடும்போது பல முன்னேற்றங்களை கொண்டது.
இதன் முக்கிய அம்சங்கள்:
சோடியம் குளிரூட்டல்: வேகப்பெருக்கி உலையாக செயல்படுவதால் P F B R மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. சோடியம் குளிரூட்டலில் இது வேகமாக செயல்படும்.
அழிவை குறைக்கும் முயற்சி: இந்த உலை அணு எரிபொருளைத் திறம்பட பயன்படுத்திக் கழிவுகளை குறைக்கும்.
சுயபொருள் தயாரிப்பு: இது தனது செயல்பாட்டின் போது புதிய எரிபொருளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது, இதனால் நீண்ட காலத்தில் உலை தானாகவே எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும்.
இந்த அனுமதி இந்தியாவின் அணுசக்தி மேம்பாட்டில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது. P F B R இன் செயல்பாடு, இந்தியாவின் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமல்லாது உலக அணுசக்தி துறையில் ஒரு முன்னணி நாடாக இந்தியாவை முன்னேற்றும்.
கல்பாக்கம் P F B R உலை, நாட்டின் வளர்ச்சிக்கான ஆற்றல் ஆதாரங்களை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகத் திகழ்கிறது. இதற்கான ஏஇஆர்பியின் ஒப்புதல், அணுசக்தி துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தைக் குறிக்கும் மைல்க்கல்லாகும்.
தற்சார்பு இந்தியாவின்உணர்வுக்கு ஏற்ப, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட இந்திய தொழில் துறையின் பங்களிப்புடன் கல்பாக்கம் P F B R உலை தயாராகும்.