செய்திகள்

கலாஷேத்ராவில் ‘கிராவிட்டி ஈவன்ட்ஸ்’ கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி

சென்னை, மார்ச். 3–

சென்னை, திருவான்மியூர் கலாஷேத்ராவில் கிராவிட்டி ஈவன்ட்ஸ் அமைப்பின் கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது.

இந்திய நெசவாளர்கள், கைவினைஞர்கள் உற்பத்தியை, லாபநோக்கமின்றி சந்தைப்படுத்தி வருவது இக்கண்காட்சி. சந்தேரி, கலம்காரி, சிக்கன்காரி, காஷ்மீரி, பாகல்பூர், ராஜஸ்தானி, பெங்காலி சேலை, தமிழக, ஆந்திரா, கர்நாடக பட்டுப்புடவை, துணி வகை, குர்தீஸ், வெள்ளி, பாரம்பரிய பழங்கால ஆபரணங்கள், வெண்கலச் சிலை, கலைப்பொருட்கள், இதில் பொத்தேரி ஜூவல்லரி புடவைகள், பாரம்பரிய பழங்கால ஆபரணங்கள், வெண்கலச் சிலை, கலைப்பொருட்கள் குர்தீஸ், வெள்ளி, கலைப்பொருட்கள், பீங்கான் குவளை, பீங்கான் ஜாடி, டீக் கப், பிளாஸ்டிக் பூ டிசைன்கள், அழகுப் பொருட்கள், ஜெய்ப்பூர் கல் நகைகள், சென்ன பட்டணம் மர பொம்மைகள், பஞ்சாப் புல்காரி டிரெஸ் மெட்டீரியல்ஸ், கைவினை பொருட்கள், ஜூவல்லரி வகைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இது கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளித்து அவர்களின் திறமையான வேலைப்பாடு பொருட்களை விற்பனை செய்து அவர்களை கவுரவிக்கிறது.

இந்த கிராப்ட்ஸ் வீவ்ஸ் கண்காட்சியில் ரெடிமேட் ஆடைகள் விற்பனைக்கு உள்ளது. கைவினைப் பொருட்களான மர வேலைப்பாடுகள், கார்ப்பெட், தோல் பொருட்கள், பொம்மைகள், மதுபானி ஓவியம், நகைகள் போன்றவை விற்பனைக்கு உள்ளது. ‘சிப்’ வைக்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை உபயோகப்படுத்தலாம்.

இக்கண்காட்சி 1–ந் தேதி துவங்கியது. 10–ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை பார்வையிடலாம்.

99400 64558, 9790835449, 99002 83789 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *