செய்திகள்

கலவரத்தால் சூறையாடப்பட்ட கனியாமூர் பள்ளி கட்டிடத்தை மறுசீரமைக்க 45 நாட்களுக்கு அனுமதி

கள்ளக்குறிச்சி, செப்.18-

கலவரத்தால் சூறையாடப்பட்ட கனியாமூர் பள்ளி கட்டிடத்தை மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 45 நாட்களுக்கு மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கி உள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில், சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை மறுசீரமைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 23ந் தேதி சென்னை ஐகோர்ட் பள்ளி நிர்வாகம் அளித்துள்ள கோரிக்கையை பரிசீலனை செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு பிறப்பித்தது.

அதனடிப்படையில் காவல் துறையினர், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகிகளின் கருத்துகளை மாவட்ட நிர்வாகம் கேட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் அலுவலர் மற்றும் காவல்துறையினரின் கண்காணிப்பில் பள்ளி கட்டிடங்களின் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 45 நாட்களுக்கு அனுமதி அளித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.