செய்திகள்

கலசப்பாக்கத்தில் நவீன அரிசி ஆலை விரைவில் அமையும்: அமைச்சர் காமராஜ் தகவல்

சென்னை, பிப். 12

கலசப்பாக்கத்தில் நவீன அரிசி ஆலை அமைக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஆர். காமராஜ் கூறினார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம்

தன் தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கத்தில் நவீன அரிசி ஆலை அமைக்க அரசு முன்வருமா என்றார்.

அதற்கு உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலளித்து கூறியதாவது:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் போளூர் நவீன அரிசி ஆலையில் மாதம் ஒன்றுக்கு 2,500 மெட்ரிக் டன் நெல் அரவை செய்யும் திறனுடன் அமைக்கப்பட்டு நல்ல நிலையில் இயங்கி வருகிறது.

போளூரில் ஒரு நவீன புழுங்கல் அரிசி ஆலையும், செய்யாரில் நவீன பச்சரிசி ஆலையில் செயல்படுகிறது. புதிதாக அரிசி ஆலை அமைக்க இடம் மற்றும் 20 கோடி ரூபாய் செலவாகும். எதிர் வரும் காலத்தில் உறுப்பினரின் கோரிக்கை பற்றியும், அதற்கான சாத்தியகூறுகள் பற்றியும் ஆராய்ந்து நவீன அரிசு ஆலை அமைப்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி துணை கேள்வி ஒன்றை எழுப்பி, ஒரு நபர் கார்டுகள் வைத்திருக்கும் அதிக அளவிலான பெண்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதில்லை. அது நிவர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் காமராஜ் பதிலளிக்கையில் கன்னியாகுமரியில் ஒருநபர் குடும்ப அட்டைக்கு பொருட்கள் வழங்கப்படுவதில் என்று உறுப்பினர் கூறியிருக்கிறார். இது சரியான தகவல் இல்லை. ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் சலுகை களையும், பொருட்களையும் பெரும் நோக்கத்தில் தனியாக கார்டுகளை பெற்றுள்ளனர்.

இது தொடர்பான ஆராய்ச்சியில் 33 ஆயிரம் ஒருநபர் குடும்ப அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனா லும் அவற்றிற்கு பொருட்கள் நிறுத்தப்படவில்லை. இதுபற்றிய புகார்கள் கொடுத்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

கலசப்பாக்கத்தில் நவீன அரிசி ஆலை

விரைவில் அமையும்: அமைச்சர் காமராஜ் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *