வாழ்வியல்

கறிவேப்பிலையில் உள்ள பல மருத்துவ குணங்கள்–1

Spread the love

கறிவேப்பிலை நல்ல மணம், சுவை கொண்ட சாதாரண பொருள் மட்டும் அல்ல. பலவிதமான சத்துகளையும், வைட்டமின்களையும் உள்ளடக்கியது. கறிவேப்பிலையில் மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரல் போன்ற தாதுசத்துகளும், வைட்டமின் ஏ,பி,சி, இ, அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள், ஃப்ளேவனாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடண்ட், கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்துகளும் நிறைந்திருக்கின்றன.

காலையில் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை மென்று தின்றால் நீரிழிவு, உடல் சோர்வு கட்டுக்குள் வரும் என்கிறார்கள்.

கறிவேப்பிலை இல்லாத சமையலே இல்லை என்று சொல்லுமளவு உணவு பொருள்களில் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதை வாசனைக்காக மட்டும் பயன்படுத்தவில்லை என்பதை உணர்ந்திருப்பவர்களின் சதவீதம் குறைவு என்றே சொல்லலாம்.

அண்மை காலத்தில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற முக்கிய நோயை தாண்டி, அழகு குறிப்புகளில் கறிவேப்பிலை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இதற்கான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்றும் சொல்லலாம்.

ஜீரண சக்தியை தூண்டும் கறிவேப்பிலை நீரிழிவு கட்டுக்கு வருவதற்கும் துணைபுரிகிறது. உணவில் இருக்கும் மாவுபொருள்கள் உடலுக்கு செல்லும் போது அதை குளுக்கோஸாக மாற்றி உடலுக்கு தருவதை செய்கிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கறிவேப்பிலை உதவுகிறது. கறிவேப்பிலையில் இருக்கும் வைட்ட மின் ஏ கண்களை பாதுகாக்க உதவுகிறது. இவை கரோட்டினாய்டு பாதிப்பை வராமல் தடுக்கும். பார்வை குறைபாட்டை உண்டாக்காமல் காக்கும். மேலும் இதிலிருக்கும் வைட்டமின் சி கல்லீரலை பலப்படுத்துகிறது. கல்லீரலில் இருக்கும் செல்களை பாதுகாத்து கல்லீரலை நலத்துடன் செயல்பட வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *