சிறுகதை

கறார் பேர்வழி – ராஜா செல்லமுத்து

மளிகை சாமான்கள் மொத்த விற்பனை, சில்லறை விற்பனை செய்யும் ஒரு பெரிய கடையில் நூற்றுக்கு அதிகமான ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அப்பளம் முதல் முதல் அரிசி வரை அந்தக் கடையில் எல்லாம் கிடைக்கும் .

முதல் தளம், இரண்டாவது தளம், மூன்றாவது தளம் என்று இயங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பெரிய கடை. வேலைக்கு வரும் ஊழியர்கள் பேக்குகளை உள்ளே கொண்டு செல்வதற்கு அனுமதிக்க மாட்டார்கள் காவலாளிகள்.

எல்லோரும் கீழே இருக்கும் முதல் தளத்தில் தான் பேக்குகளை வைத்து விட்டுச் செல்ல வேண்டும். மாறாக யாரும் பைகளை மேலே எடுத்துச் செல்லக்கூடாது என்ற நிபந்தனை இருந்தது.

சில நேரங்களில் சிலர் சலுகை அடிப்படையில் பைகளை மேலே எடுத்துச் செல்வதுண்டு .அது காவலாளிக்கும் கடை முதலாளிக்கும் தெரிந்தவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் என்றால் காவலாளிகள் கண்டு கொள்ள மாட்டார்கள்.

ஆனால் சாமுவின் பையை மட்டும் அந்த காவலாளிகள் ஒருபோதும் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை.

சார் இந்த பையில மாத்திரம் மருந்து இருக்குது .நான் சாப்பிடணும் .சீரகம் போட்ட தண்ணீர் இருக்கு. நான் அடிக்கடி குடிக்கணும் .சில புத்தகங்கள் இருக்கு நான் இந்த பைய எடுத்துட்டு போகட்டுமா? என்று சாமு கேட்டாலும் அந்த காவலாளிகள் சாமுவின் பையை மட்டும் மேலே எடுத்துப் போக விடுவதில்லை.

சார் இது பொருள்கள் விக்கிற கடை .யாரு எப்ப எப்படி மாறுவாங்கன்னு தெரியாது. ஒவ்வொரு நேரமும் யாருடைய பையும் நாங்க பரிசோதனை செய்ய முடியாது. மேலே இருந்து வரும்போது நீங்க எதையாவது எடுத்து கீழே கொண்டு வந்தா என்ன பண்றது? என்று காவலாளி கேட்டபோது

ஏங்க என்னைய பாத்தா உங்களுக்கு திருடன் மாதிரி தெரியுதா? ஏதோ முக்கியமான பொருள் இருக்குன்னு தானே கேட்கிறேன். நான் சாப்பிடுற மாத்திரை, இன்னும் சில முக்கியமான விஷயங்கள் இருக்கு அதை எடுத்துட்டு போக அனுமதிக்க மாட்டீங்களா ? என்று கொஞ்சம் கெஞ்சலாக கேட்டான் சாமு

அதெல்லாம் முடியாது .நீங்க பையைக் கீழே தான் வச்சிட்டு பாேகனும்

உங்களுக்கு தேவையான பொருள மேலே எடுத்துட்டு போங்க . ஆனா பைய மட்டும் கொண்டு போயிரக் கூடாது என்று மீண்டும் அதிகாரத் தாெனியில் கட்டளையிட்டான் காவலாளி.

இதற்கு மேல் பேசினால் தனக்கு மரியாதை இல்லை என்பதை உணர்ந்து கொண்ட சாமு /பையை கீழே வைத்து விட்டு தான் போவான். அன்றிலிருந்து எப்போதும் அவன் பையை மேலே எடுத்துப் போவதில்லை அவனுடைய மருந்து ,மாத்திரைகள் மட்டும் எடுத்து செல்வதுண்டு அவசியம் இல்லாதவற்றை கீழே வைத்து விட்டு சென்று விடுவான். காவலாளிக்கும் சாமுவுக்கும் அதிலிருந்து ஒரு சுமூகமான உறவு இல்லாமல் இருந்தது .

அதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை .நமக்கு போட்டியாக இந்த உலகத்தில் நிறையப் பேர் இருக்கிறார் உல்.

இந்த எளிய மனிதர்களிடம் போய் போட்டியிடுவதா ? வேண்டாம் என்று விட்டுவிடுவான்.

அதற்காக அவர்களுடன் சண்டை போடுவது. முறைத்துக் கொள்வது இல்லை.

இப்படி போய்க் கொண்டிருந்த அந்த நாட்களில் ஒரு நாள் எந்த காவலாளி சாமுவின் பையை மேலே கொண்டு போக கூடாது என்று சொன்னானோ? அந்தக் காவலாளிக்கு மூன்றாவது மாடியில் வேலை மாற்றப்பட்டது. இருந்தாலும் சாமு எல்லாேரும் பாேல மற்ற காவலாளிகளும் அப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு பையை கீழே வைத்து விட்டு வருவான்.

ஒருநாள் மூன்றாவது மாடியில் இருந்த காவலாளிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

உடனடியாக தூக்கிச் செல்வதற்கு ஆயத்தமான போது கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவனுக்கு முதலீடு செய்து கீழே தூக்கிப் பாேவதற்கு படாதபாடு பட்டு விட்டார்கள்

சாமு தன்னிடம் வைத்து இருந்த நெஞ்சு வலிக்கான முதல் உதவி மாத்திரைகளைத் தேடினான்.’ அது கீழ்த்தளத்தில் பையில் வைக்கப்பட்டிருந்தது.

அந்த மாத்திரையும் கையோடு எடுத்துட்டு வந்திருக்க வேண்டும். இப்ப அந்த மாத்திரை இருந்திருந்தால் நெஞ்சு வலிக்கு இந்த மாத்திரையை கொடுத்து இவருக்கு முதல் உதவி செய்திருக்கலாம் என்று நினைத்தான் சாமு.

அது முடியாமல் போனது. கடையில் கூடியிருந்த கூட்டம். லிப்ட் சரியாக வேலை செய்யாமல் இருந்தது. படிகளில் பொருட்கள் இருந்தது என்று தாமதமாகத்தான் அந்த காவலாளியைக் கீழே இறக்கி கொண்டு வர முடிந்தது .

கீழே இருக்கும் வாகனத்தில் அந்த காவலாளியை ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவருடைய உயிரின் நிலை கேள்விக்குறியாக இருந்தது.

ஏன் இவ்வளவு தாமதமாக கொண்டு வந்தீர்கள். ரொம்ப இக்கட்டான நிலையில் இருக்கிறார். இருந்தாலும் சின்ன முதலுதவி செஞ்சி இருக்கீங்க அதனால இவர காப்பாத்தலாம் அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு . இத யார் செஞ்சது? இந்த மாத்திரையை யார் இவருக்கு குடுத்தது? என்று மருத்துவர் கேட்டபோது ‘

எல்லோரும் சாமுவை அடையாளம் காட்டினார்கள்.

குட் இன்னும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த மாத்திரை கொடுத்து இருந்தீங்கன்னா இவ்வளவு கிரிட்டிக்கல் ஆன பிரச்சனை வந்திருக்காது.

இருந்தாலும் பரவாயில்ல. உயிருக்கு ஒன்னும் ஆபத்து வராது காப்பாத்திடலாம் என்றா மருத்துவர் .

இல்ல சார் சாமு பையில் எப்பவுமே இந்த மாதிரி முதலுதவி மாத்திரைகள் வச்சிருப்பான். ஆனா இந்த காவலாளிகள் தான் பைய மேலே கொண்டு போக கூடாது. கடையிலிருந்து ஏதாவது பொருட்கள திருடிட்டு போயிருவாங்க அப்படின்ற தப்பா எண்ணத்தில பையை கீழேயே வச்சுட்டு போக சொல்வாங்க. இல்லன்னா மூணாவது மாடியில இந்த காவலாளிக்கு நெஞ்சு வலிக்கும் போதே சம்மந்தமான மாத்திரை கொடுத்து இருப்பான் இவ்வளவு பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது .

ஆனா எப்படியோ கூட்டத்த விலக்கி வேகமா வந்து அந்த முதலுதவி மாத்திரை குடுத்து இந்த காவலாளிய காப்பாற்ற முடிந்தது. ஏதோ என்னால முடிந்தது என்று சாமு சாெல்ல

குட் ஜாப் .ஒரு உயிர நீங்க காப்பாத்திருக்கிங்க நீங்க வச்சிருந்த அந்த மாத்திரைகளால இது மாதிரி முதலுதவி பண்ணுங்க உயிருக்கும் மத்தவங்களுக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று மருத்துவர் சொன்னபோது

அந்த காவலாளியின் கண்களில் கண்ணீர் வழிந்தது .

எத்தனையோ முறை சாமுவின் பையை மேலே கொண்டு போகக் கூடாது என்று கராறாகப் பேசி விரட்டிய கறார் பேர்வழி தான் நான் என்னை மன்னித்துவிடு என்பது போல சாமுவைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு கண்ணீரை விட்டார் அந்தக் காவலாளி.

காவலாளியின் கைகளை ஆதரவாகப் பற்றிய சாமு

ஒன்னுமில்லங்க ரெஸ்ட் எடுங்க என்றான், சாமு.

சரி என்பது போல் தலையாட்டினார் காவலாளி.கண்கள் பனித்தது.

சிறிது நேரத்திற்கு எல்லாம் மருத்துவம் செய்யப்பட்ட காவலாளி உயிர் தப்பியது. இதை கேள்விப்பட்ட முதலாளி கடையின் முதலாளி சாமுவை வெகுவாகப பாராட்டினார்’.

அன்றிலிருந்து முதலாளி எந்த ஊழியர்களின் மீதும் சந்தேகப்படுவதில்லை .

பைகளை மேலே கொண்டு செல்வதற்கு அனுமதி அளித்தார்.

இப்போது எல்லா ஊழியர்களின் பைகளில் முதலுதவி செய்வதற்கான மருந்து மாத்திரைகள் இருந்தன.

ஆபத்து வந்தாலும் அதை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஒன்று எல்லாத் தளங்களும் சென்றது.

பயம், பிரச்சினை இன்றி எல்லாத் தொழிலாளர்களும் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *