வாழ்வியல்

கறவை மாடுகளின் சினைப் பருவமின்மை அதன் தீர்வுகள்!

தமிழ்நாட்டின் முதுகெலும்பு விவாசயமும், கால்நடை வளர்ப்பும் தான். அதிலும் பால் மாடு வளர்ப்பு பல லட்சம் கிராமங்களுக்கு வாழ்வாதாரமாகும். கால்நடைகள் மூலம் பெறப்படும் பால், தயிர், பாலாடைகட்டி, நெய், வெண்ணெய் போன்றவை, மக்களுக்கு உணவாகவும் உணவுக்கு மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.

சினைப் பருவமின்மை என்பது, சினைப்படும் அறிகுறியை வெளிப்படுத்தாமை அல்லது சினைப் பருவ அறிகுறிகளை கண்டுபிடிக்க இயலாமை ஆகும். இந்நிலை பொதுவாகக் கிடாரிகளிலும், எருமைகளிலும், கன்றை ஈன்ற மாடுகளிலும் காணப்படும் முக்கியச் சிக்கலாகக் காணப்படுகிறது.

* உடற்செயலியல் தொடர்பான சினைப்பருவமின்மை

* பருவமடைதலுக்கு முன்பு ஏற்படும் சினைப்பருவமின்மை

* காலப் பருவமின்மை

* கறவை மாடுகளின் சினைப்பருமின்மை.

அதாவது, பால் கறக்கும் காலங்களின்போது அதிகளவு புரோலாக்டின் கரப்பதால் கருமுட்டை வளர்ச்சியைத் தூண்டும். இயக்குநீர் குறைதல், கன்று ஈன்ற மாடுகளில் சினைப்பருவமின்மை, பொதுவாகவே, எருமை மாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. பசுக்களில் 45 நாட்களாகவும், எருமைகளில் 90 நாட்களாகவும் இந்நிலை காணப்படுகிறது.

* இக்காலம் கன்று ஈன்ற பின் கருப்பை சுருங்குவதற்கும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும் ஏற்ற காலமாக விளங்குகிறது இதை தவிர்க்க இயலாது.

* சூலகத்தல் கார்பஸ் லூட்டியும் நிலையாக இருப்பதால் உண்டாகும் சினைப்பருவமின்மை. கர்ப்பப்பை வீக்கம், கருச்சிதைவு, கர்ப்பப்பை சீழ்கட்டி, கருக்கலைப்பு, முதிர் கருவைப் பதப்படுத்திய நிலை ஆகியவையே கார்பஸ் லூட்டியம் சூலகத்தில் நிலையாக தங்குவதற்கு காரணங்களாகும்.

* ஊமை சினைப்பருவம். அதவாது கறவை மாடுகளில் ஈஸ்ட்ரோஜல் மற்றும் புரோஜெஸ்டின் இயக்கு நீர் குறைவதாலும் வெப்ப அயர்ச்சியாலும் பாரம்பரிய பண்பாலும், எருமைகளில் கோடைக் காலத்தல் பொதுவாகக் காணப்படும் சினைப்பருவமின்மையாகும்.

* சினைப்பருவம் வருவதைக் கண்டுபிடிக்க இயலாமை. சினைப்பருவ அறிகுறிகளைச் சில மாடுகள் வெளிகாட்டுவதில்லை. ஆனால் இனப்பெருக்க உறுப்புகளில் பருவச் சுழற்சி மாற்றம் இருக்கும். இந்நிலைக்கு தீராத நோய், தீவனப் பற்றாக்குறை, பராமரிப்புக் குறைவு, பாலை அதிகம் கறத்தல், காற்றோடமில்லாத கொட்டகை அமைப்பு போன்றவையே முக்கிய காரணங்களாகும்.

உணவூட்டம், கன்று ஈன்ற பின்பு குறைவான உணவை உட்கொள்ளுதல், தாதுக்குறைபாடு, மேலும் சில மாடுகள் அதிகமாக உணவு உட்கொள்வதாலும் சினைப்பருவமின்மை உண்டாகிறது. உடல்வாகு மதிப்பீடு, நல்ல ஆரோக்கியமான கறவை மாட்டிற்கு மதிப்பீடு 3.5 என்ற அளவுக்கு அதிகமாக இருந்தால் பருவமில்லாமை ஏற்படும். வெப்ப அயர்ச்சி வெப்ப அயர்ச்சியானது அண்டகத்தின் செயல் தன்மையைச் குறைத்து அண்ட வெளியாதலைத் தவிர்க்கிறது. மற்றும் கன்றுகளுக்கு நீண்ட நாட்கள் பாலூட்டல், பாரம்பரியத் தன்மை, ஒட்டுண்ணி, நோய் தாக்குதல், வயதான மாடுகள், கன்று ஈனும்போது ஏற்படும் கோளாறுகள் நோய்கள் சினைப்பருவமின்மைக்குக் காரணங்களாகும்.

குடற்புழு நீக்குதல், சுகாதாரமான கொட்டகை அமைத்தல். தாதுப்பு, சமச்சீர் தீவனம் கொடுத்தல், நோயுள்ள மாடுகளை தனியே பிரித்தல், சினைப்பருவ அறிகுறிகளை தவறாமல் கவனித்தல், திட்டமிட்ட கருவூட்டல் முறையை கையாளுதல் போன்ற தடுப்பு முறைகளை கையாள வேண்டும். மாடுகளின் பருவமின்மையை போக்க கால்நடை மருத்துவரை அணுகி இந்நிலைக்கான காரணத்தை கண்டறிந்து தகுந்த மருந்து, கருவிகளைக் கொண்டு பசுக்கள், எருமைகள் பருவசுழற்சியில் இல்லாவிட்டாலும் அவற்றை சினைப்பருவத்திற்கு கொண்டு வந்து சினைப்பிடிக்க செய்யலாம்.

மேலும் விவரம் அறிய www.tn.gov.in/animalhusbandry

www.tanuras.gov.in பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *