செய்திகள் வாழ்வியல்

கர்ப்பக்கிரகத்தில் முருகனும் – விநாயகரும் சேர்ந்து இருக்கும் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில்

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் 69-வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இது பஸ் நிலையம் அருகில் உள்ளது. இதற்காக காப்பு கட்டி விரதம் இருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி, பால் காவடி, பறவைக் காவடி, அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்து வருவர். இதன் தர்மகர்த்தா சிறப்பாக ஏற்பாடு செய்து வருகிறார்.

நாம் இன்று அறியப்போகும் திருக்கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகரமான ராமநாதபுரத்தில் உள்ள வழிவிடும் முருகன் திருக்கோவில் ஆகும்.

இந்தத் திருக்கோவிலில் கர்ப்பக்கிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து ஒன்றாக இருப்பது மிக மிக சிறப்பான ஒரு அரிதாகவே மற்ற கோவில்களில் காண முடியாத ஒரு சிறப்பு அம்சமாகும். அனேகமாக இந்துக் கோவில்களில் கோவிலில் நுழைந்தவுடன் இடதுபுறம் விநாயகரும் வலதுபுறம் இருந்து அருள்பாலிப்பார்கள். ஆனால் இந்த திருக்கோவிலில் அண்ணனும் தம்பியும் ஒரே கர்ப்பக்கிரகத்தில் இருந்து அருள்பாலிக்கிறார்கள்.

இந்தத் தல வரலாறு பற்றி அறியும் பொழுது இந்த கோவில் உள்ள இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக அரச மரம் ஒன்று இருந்ததாம். அதன் கீழ் ஒரு சிறிய வேல் நடப்பட்டு அதற்கு பூஜை செய்து வந்தனர். இந்த இடத்திற்கு அருகிலேயே நீதிமன்றம் இருந்ததால், நீதிமன்றத்திற்கு வழக்கு தொடுத்தவர்கள் இங்கு வந்து இந்த வேலை வழிபட்டு தங்கள் பக்கம் தீர்ப்பு சாதகமாக வழங்க வேண்டும் என்று வேண்டிச் சென்றனர். அதேபோன்று இங்கேயே வேண்டி சென்றவர்களுக்கு மிகவும் திருப்புமுனையாக வழக்குகள் இவர்கள் பக்கம் சாதமாகவும் அதே நேரத்தில் சில வழக்குகளில் எதிராளிகள் வந்து தாங்கள் இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக கூறுவதும் நடந்ததை கண்டு எல்லாம் இந்த வேலின் அருளென்று நம்பி இந்த கோவிலை எழுப்பினர்.

சொத்துக்காக உறவினர்களுக்குள் சண்டையிட்டு பின்னர் ஒன்று சமாதானமாகவும் அல்லது சாதகமாகவும் தீர்ப்பு கிடைத்தவுடன் இந்த முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

மேலும் இங்கு உள்ள ஒரு சாயா மரம் சனீஸ்வரனின் தாயார் சாயா தேவியை அருள்பாலிப்பதாக ஐதீகம் உள்ளது. இந்தத் திருக்கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களுக்காக பக்தர்களுக்காக திறந்து இருக்கிறது. தினமும் மூன்று கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோவில் ராமநாதபுரம்

– 6 2 3 50 1. தொலைபேசி எண் : 9894887503

பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை

பேசா திருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும்

மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *