எடப்பாடி பழனிசாமி மீதும் குற்றச்சாட்டு
பெங்களூரு, ஏப். 10–
கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடகாவில் அண்ணா திமுகவை ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ள கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பிற மாநிலங்களில் ஏன் அதிமுகவை வளர்க்க வேண்டும் என மேலிடம் நினைப்பதாக கர்நாடகா நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதை கூட கட்சி மேலிடம் கூற மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு பிறகு கர்நாடகாவில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை மதிப்பளிப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து எஸ்.டி. குமார் ராஜினாமா செய்துள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் அதிருப்தியில் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.