செய்திகள்

கர்நாடக மாணவர்களுக்கு மே 20–ந்தேதி நீட் தேர்வு

புதுடெல்லி, மே.7-

கர்நாடகாவில் ரெயில் தாமதத்தால் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மே 20-ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மாணவர்கள், பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் ‘நீட்’ தேர்வு நடந்தது. ஆனால், கர்நாடகத்தில் ரெயில்களின் தாமதத்தால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது. அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்குமாறு அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி, மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.

அதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அம்மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளது. அதன்படி, அவர்களுக்கு 20-ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

இதுபோல், ஒடிசாவில் ‘பானி’ புயல் தாக்குதல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால், அம்மாநில மாணவர்களுக்கும் 20-ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களிலேயே தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *