போஸ்டர் செய்தி

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்; சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

Spread the love

டெல்லி, ஜூலை 16–

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில், சபாநாயகர் முடிவெடுக்கும் அதிகாரத்தில், நாங்கள் எதுவும் உத்தரவிட முடியாது என்று, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தை ஒட்டுமொத்த நாடும், உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஆளும், மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள், ராஜினாமா செய்ததை அடுத்து, ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

இருப்பினும், அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்காமல், சபாநாயகர் காலம் தாழ்த்தி வருகிறார். அதேசமயம், அவர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில், ஆளும் அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில், தங்கள் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடுமாறு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 10 பேர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில் மேலும் 5 அதிருப்தி எம்.எல்.ஏக்களும் இணைந்து கொண்டனர்.

இந்த வழக்கை, மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வருகிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.எல்.ஏக்கள் ராஜினாமா அல்லது தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகர் அதிகாரத்தில், உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இதற்காக எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. சபாநாயகருக்கான அதிகாரங்களை சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது என்று கூறி உள்ளது.

இதனால் கர்நாடக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழல், மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *