செய்திகள்

கரோனா நிவாரண உதவித் தொகை 80% பேருக்கு வழங்கப்பட்டுவிட்டது

Spread the love

கரோனா நிவாரண உதவித் தொகை 80% பேருக்கு வழங்கப்பட்டுவிட்டது:

அமைச்சர் காமராஜ் தகவல்

திருவாரூர், ஏப்.7–

திருவாரூர் நகராட்சி நிர்வாகம் சார்பில், பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி தெளிப்பு சுரங்கப் பாதையை உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:–

தமிழகம் முழுவதும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் ரூ. 1000 நிவாரண நிதி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வரை 79.48 சதவீதம் வழங்கப்பட்டுள்ளன. மீதம் உள்ளவர்களுக்கு நாளை (இன்று) உதவித் தொகை வழங்கப்பட்டுவிடும். இதைத்தொடர்ந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட இலவச பொருட்கள் வழங்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் 2,261 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இது தவிர கொரோனா அச்சுறுத்தல் உள்ள பகுதிகளைச் சேர்ந்த 9,053 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *