செய்திகள்

கரூர் வைசியா வங்கி லாபம் ரூ.235 கோடியாக உயர்வு

சென்னை, ஜூன். 26–

கரூர் வைசியா வங்கியில் கடந்த ஆண்டில் (2019–2020) லாபம் ரூ. 211 கோடியிலிருந்து 11% அதிகமாகி ரூ.235 கோடியாக அதிகரித்தது. 4வது காலாண்டில் நடப்பு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை லாபம் ரூ. 60 கோடியிலிருந்து 40% அதிகமாக ரூ.84 கோடியாக அதிகரித்தது.

கரூர் வைசியா வங்கி நான்காம் காலாண்டு நிகர லாபம் 40% வளா்ச்சி பெற்று ரூ.84 கோடி ஈட்டியுள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காம் காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ.1,803 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருவாய் ரூ.591 கோடியாகும். நான்காம் காலாண்டு நிகர லாபம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 40% அதிகரித்து ரூ.84 கோடியை வங்கி ஈட்டியுள்ளது.

2019–2020 முழு நிதி ஆண்டில் வங்கியின் மொத்த விற்றுமுதல் ரூ.1,07,591 கோடியாக இருந்தது. வங்கி பெற்ற மொத்த டெபாசிட் மதிப்பு ரூ.59,075 கோடியாகும். நிதியாண்டில் வங்கி அளித்த மொத்த கடன் மதிப்பு ரூ.48,516 கோடியாக இருந்தது. வாராக்கடன் விகிதம் 3.92 சதவீதமாகக் குறைந்து அதன் மதிப்பு ரூ.1,809 கோடியாக உள்ளது. முழு நிதியாண்டில் வட்டி வருவாய் ரூ.2,348 கோடியாகும்.

செயல்பாட்டு லாபம் ரூ.1,761 கோடியாக இருந்தது. நிகர லாபம் முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 11% வளா்ச்சி பெற்று ரூ.235 கோடியாக இருந்தது. மாா்ச் மாத இறுதியளவில் வங்கிக்கு நாடு முழுவதும் 779 கிளைகளும் 2,224 ஏ.டி.எம்.களும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *