செய்திகள்

கரூர் வைசியா வங்கி கிளைகள் மூலம் ஸ்டார் ஹெல்த் மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி விற்பனை செய்ய ஒப்பந்தம்

சென்னை, ஜூலை 9–

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மருத்துவ இன்சூரன்ஸ் திட்டங்களில் சிறந்து விளங்கும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன பாலிசிகளை கரூர் வைசியா வங்கி கிளைகளில் விற்பனைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

‘ஸ்டார் உடல் நலம்’ என்னும் காப்பிடு திட்டம் டிஜிட்டல் முறையில் வாங்கலாம். ஸ்டாருடன் பேசுங்கள் திட்டம் மூலம் இதன் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம். கரூர் வைசியா வங்கி கிளை ஊழியர்கள் அனைவரும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி விற்பனை செய்ய தகுந்த பயிற்சியும் ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. என்று ஸ்டார் ஹெல்த் நிர்வாக இயக்குனர் ஆனந்த் ராய் தெரிவித்தார்.

கரூர் வைசியா வங்கி தலைவர் ஜே.நடராஜன் பேசுகையில், விலை குறைவான காப்பீடு திட்டங்கள், இன்சூரன்ஸ் கோரிக்கை உடனடி தீர்வு காரணமாக ஸ்டார் ஹெல்த்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *