செய்திகள்

கரூரில் 19-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Makkal Kural Official

கரூர், ஜூலை 15 – கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், ஜூலை மாத தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19, வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வெண்ணைமலையில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் துறைக் நிறுவனங்கள் 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளன. 8-ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம்.

பங்கேற்போர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இது முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 04324-223555 மற்றும் 9789123085 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *