செய்திகள்

கரூரில் 10ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 12ம் வகுப்பு மாணவன் கைது

Makkal Kural Official

கரூர், பிப். 24–

கரூரில் 10ம் வகுப்பு மாணவியை நண்பர்களுடன் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்ட பகுதியை சேர்ந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் பழகியதாக தெரிகிறது. மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு தனியாக வரவழைத்த 12ம் வகுப்பு மாணவன் ஒருவன் அங்குள்ள ஒரு மறைவான பகுதிக்கு வரவழைத்துள்ளான். நம்பி சென்ற மாணவியை, அந்த மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

பிறகு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியை சக மாணவர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். மாணவி அலறியடித்து தப்பி ஓடி வீட்டிற்கு வந்தார். தனது தந்தையிடம் நடந்ததை கூறியதை தொடர்ந்து பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து பாலவிடுதி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், 12-ம் வகுப்பு மாணவனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார். கழுத்தறுபட்ட நிலையில், பள்ளி மாணவி தனியார் -மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கூட்டு பாலியலில் ஈடுபட்ட மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *