உடல் எலும்புகள் வலிமை பெறும்
நல்வாழ்வுச் சிந்தனைகள்
கருப்பு கொண்டைக்கடலை சாப்பிடுவதால் அதிலுள்ள மருத்துவ குணங்கள் உடலுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும்.
கருப்பு கொண்டைக் கடலையில் மாங்கனீசு, தயமின், பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, புரோட்டீன், இரும்புச்சத்து, போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
தினமும் சிறிதளவு ஊற வைத்த கொண்டக்கடலையை சாப்பிட்டு வந்தால் இந்த சத்துக்கள் அனைத்தும் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும்.
இந்தச் சத்துக்கள் மேலும் அதிகமாக கிடைக்க கொண்டைக்கடலையை ஊறவைத்து முளைகட்டி சாப்பிடவேண்டும்.
கொண்டைக்கடலையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் கொண்டைக்கடலையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஊற வைத்த கொண்டக்கடலையை தினமும் சாப்பிடுவது ஆண்மையை அதிகரிக்கும். கொண்டைக் கடலையில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உடல் எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது.இதில் உள்ள போலேட் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
மேலும் கருப்பை குழாயில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது .கரு வளர்ச்சிக்கு போலிக் அமிலம் உதவுகிறது.
கொண்டைக்கடலையில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது .இந்த கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள பொட்டாசியம் சத்து இதயம் சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும்.
சத்துக்கள் நிறைந்த கொண்டைக்கடலையை நாம் அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளும் போது சிலவிதமான தீமைகளும் நமது உடம்பில் ஏற்படுகின்றன என்பதைத் தெரிந்து கொண்டு கொண்டைக்கடலையை அளவோடு சாப்பிடுங்கள்.