போஸ்டர் செய்தி

கருணாநிதி உடலுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி

சென்னை,ஆக.8–

ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து முதலில் கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்பின் சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர்.

காலை 6.45 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், காமராஜ் மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *