செய்திகள்

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் சிவராத்திரி விழா

சென்னை, மார்ச் 12

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் உள்ள ஞானலிங்கத்திற்கும், நந்தி பகவானுக்கும் சிவதீட்சிதர்களை கொண்டு 4 காலபூஜையும், ஞானலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பக்தர்களுக்கு அர்பணித்து, யோக பிரவேசம் செய்து 7 ஆண்டுகளாக பூட்டிய அறையில் யோக தவத்தில் இருப்பவருமான கருங்குழி பிருந்தாவன் சித்தர் “யோகி ரகோத்தமா” ஸ்வாமிகளுக்கு சித்தர்களின் மரபுவழி வந்த பக்தர்களின் திருகரங்களால் மாலை 6 மணி, இரவு 9, 12 மணி, அதிகாலை 3 மணி ஆகிய நேரத்தில் செம்பாக்கம் கைலை செல்வராஜ் ஸ்வாமிகள் தலைமையில் 4 கால பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் முன்னாள் டிஜிபி பாலச்சந்தர், எஸ்பி ஸ்ரீதேவி, செங்கல்பட்டு ஏஎஸ்பி ஆகாஷ் பச்சேரா, மதுராந்தகம் டிஎஸ்பி கவினா, தொழிலதிபர்கள் மாறன், மோகன், கே.ஆர்.சி. சதீஷ்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆர்.வி.ஏழுமலை தாசன் சிறப்பாக செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *