நியூயார்க், செப். 11–
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இருவரும் முதன்முறையாக இன்று காலை 6.30 மணி அளவில் பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். இதில் அமெரிக்கப் பொருளாதார நிலவரம் முதல் கருக்கலைப்புச் சட்டம் வரை அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.
விவாதம் தொடங்குவதற்கு முன்பாக அரங்குக்கு வந்த கமலா ஹாரிஸ் நேராக டிரம்ப் இருந்த இடத்திற்கு சென்று, தனது கையை நீட்டி கமலா ஹாரிஸ் என்று தன்னைதானே அறிமுகம் செய்து கொண்டார்.
விவாதத்தைத் தொடங்கிய கமலா ஹாரிஸ், டிரம்ப் ஆட்சியின் கீழ் தான் அமெக்கா மிகப் பெரிய வேலைவாய்ப்பின்மை சிக்கலை எதிர்கொண்டது என்று பேச தொடங்கினார்.
அவர் மேலும் பேசியதாவது:–
அமெரிக்காவில், வாய்ப்புகளைத் தரும் பொருளாதாரத்தை கட்டமைக்க விரும்புகிறேன். அமெரிக்காவில் வீட்டு வசதியை கையடக்க விலைக்குக் கொண்டு வருவேன். குழந்தை வரிக்கடன் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
டிரம்பால் கொண்டு வரப்பட்ட கருக்கலைப்புக்கு எதிராக 20 மாகாணங்களில் சட்டங்கள் உள்ளன. பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று டிரம்ப் கூறக்கூடாது. ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையை அரசு நிர்ணயிக்கக் கூடாது. டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் தேசிய கருக்கலைப்பு கொள்கையை கொண்டு வந்து விடுவார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்புக்கு ஆதரவாக இருப்போம்.
அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை என அவருடன்
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ட்ரம்ப், கருக்கலைப்பு தொடர்பாக மிக ஆபத்தான கருத்துக்களை ஜனநாயக கட்சியினர் கூறினர். பைடன் ஆட்சியில் 9 மாதங்களிலும் கருக்கலைப்பு செய்ய அனுமதித்தனர். கருக்கலைப்பு தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் மாகாணங்களில் இருக்க வேண்டும். கடந்த 52 ஆண்டுகளாகவே கருக்கலைப்பு பிரச்சினை ஒரு சிக்கலாக உள்ளது. செயற்கை கருத்தரிப்புக்கு நான் எதிரானவன் அல்ல. கருக்கலைப்புக்கு எதிரானது எனது நிலைப்பாடு; இருந்தாலும் மக்களின் கருத்துப்படி செயல்படுவேன் என்றார்.