சினிமா செய்திகள்

கரீனாவுக்குப் பதில் சீதையாக நடிக்கும் கங்கனா ரணாவத்?

மும்பை, ஜூன்.24–

ராமாயண படத்தில் சீதை கதாபாத்திரத்தில் கரீனா கபூர் நடிக்க இருந்த நிலையில், தற்போது கங்கனா ரணாவத்தை நடிக்க வைக்க படக்குழு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ராமாயண படம் தயாராகிறது. இப்படத்தை ‘தங்கல்’ படம் மூலம் பிரபலமான நிதிஷ் திவாரி, ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உடையார் ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார்.

இந்தப் படத்தில் முதலில் சீதை வேடத்தில் நடிப்பதற்காக படக்குழுவினர் கரீனா கபூரிடம் கேட்டுள்ளனர். இதில் நடிக்க அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் கரீனா கபூர் சீதை வேடத்தில் நடிப்பதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின.

இதனால் தற்போது சீதை வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்தை பரிசீலிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு திரைக்கதை எழுதும் விஜயேந்திர பிரசாத், சீதை வேடத்துக்கு கங்கனா ரணாவத் பொருத்தமாக இருப்பார் என்று சிபாரிசு செய்ததாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *