கராச்சி, செப். 25–
கராச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது இரண்டு வயது மகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் தாஹிர் என்பவர் தனது இரண்டு வயது மகள் அனுமுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவரும் காயமடைந்தனர். நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் தந்தை மற்றும் மகள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேரும் பலி
மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இது வழிப்பறி சம்பவமா அல்லது திட்டமிட்ட படுகொலையா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட புல்லட் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களில் மட்டும், கராச்சியில் மூன்று கொலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது இரண்டு வயது மகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கராச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.