செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம்

சென்னை, அக்.1-

கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சென்றார்.

கேரளாவில் சமீபத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இந்த நிலையில் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 30-ந்தேதி (நேற்று) தொடங்கி இம்மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு அங்கமாக, ‘கூட்டாட்சி மற்றும் மத்திய–மாநில உறவு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அங்கு 4 மணிக்கு நடைபெறும் அந்த கருத்தரங்கில் அவர் பங்கேற்கிறார்.

அந்த கருத்தரங்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் முக்கிய உரை ஆற்றுகின்றனர்.

அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு திரும்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *