வர்த்தகம்

‘கம்ப்யூட்டர் ஏஜ்’ நிறுவனத்தின் பங்கு வெளியீடு : 21ந் தேதி துவங்குகிறது

மியூட்சுவல் பண்ட், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பதிவாளராக செயல்படும்

‘கம்ப்யூட்டர் ஏஜ்’ நிறுவனத்தின் பங்கு வெளியீடு : 21ந் தேதி துவங்குகிறது

சென்னை, செப். 18–

‘கம்ப்யூட்டர் ஏஜ்’ மேனெஜ்மெண்ட் சர்வீசஸ் (கேம்ஸ்) பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) இம்மாதம் 21ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விலை ரூ.1,229 முதல் 1230 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 23ந் தேதி விற்பனை முடிவடைகிறது என்று இதன் தலைமை செயல் அதிகாரி அனுஜ் குமார் தெரிவித்தார்.

37.4 சதவீத பங்குகள் எண்ணிக்கையில் 1,82,46,600 பங்குகள் தேசிய பங்கு சந்தை மூலம் விற்பனைக்கு வருகின்றன. 23–ம் தேதி வரை பங்குகளை பெற விண்ணப்பிக்க முடியும். பங்கு விற்பனை ரூ.2,242 கோடி வரை கிடைக்கும் என்று கேம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேம்ஸ் நிறுவனம் இந்தியாவில் பரஸ்பர நிதி மற்றும் நிதி சார்ந்த சேவைகளை இணை வழியில் அளிக்கும் சேவையில் முன்னிலையில் உள்ளது.

பிரபல மியூட்சுவல் பண்ட் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு அதன் முதலீட்டாளர்களின் யூனிட்களை பதிவு செய்தல், மாற்றம் செய்தல் போன்ற பணிகளில் சிறப்பு பெற்று விளங்குவது ‘கம்ப்யூட்டர் ஏஜ்’ நிறுவனம்.

நாட்டில் உள்ள 5 மியூட்சுவல் பண்ட்டில் 4 மியூட்சுவல் பண்ட் கம்ப்யூட்டர் ஏஜ் தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறது. நவீன தொழில் நுட்பம், சிறந்த அடிப்படை வசதி கொண்டுள்ளதால் நாட்டின் மியூட்சுவல் பண்ட் யூனிட் பதிவாளர் மற்றும் மாற்றம் ஏஜெண்ட் பணியில் 70% அளவை கம்ப்யூட்டர் ஏஜ் கொண்டுள்ளது. 3 கோடியே 98 லட்சம் மியூட்சுவல் பண்ட் யூனிட்கள், 2 கோடியே 90 லட்சம் இன்சூரன்ஸ் பாலிசிகளை நிர்வகிக்கிறது.

‘கம்ப்யூட்டர் ஏஜ்’ நிறுவனம் இந்திய நிதித்துறையில் 20 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளருக்கு நாடு முழுவதும் உள்ள 278 கிளைகள் மூலம் சேவை புரிகிறது. இதற்கு முக்கிய தகவல் மையங்கள் 3 சென்னையிலும், கோவையில் ஒன்றும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *