சினிமா

‘‘கம்போடியாவில் யாருக்கும் இங்கிலீஷ் தெரியவில்லை”

சென்னை, அக் 4–

‘கம்போடியாவில் யாருக்கும் இங்கிலீஷ் தெரியவில்லை என்றும் அதனாலேயே ஷூட்டிங்கை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்னை திரும்பினேன்…’ என்று நடிகர் பாக்யராஜ் வேதனையோடு கூறினார்.

ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் நேதாஜி பிரபு தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் `ஒளடதம்’. இயக்கியுள்ளவர் ரமணி. இது மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது .

படத்தின் அறிமுகக பிரமாண்ட பேனா வெளியீட்டு விழா பிரசாத் லேபில் இயக்குநர்கள் பாக்யராஜ் , பேரரசு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. திரையரங்குகளில் பேனா தரும் போது` தமிழா தமிழில் கையெழுத்திடு ` என்கிற பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவிருக்கிறது படக் குழு .

இயக்குநர் பேரரசு, ‘இன்று தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்று முயற்சி தொடங்குகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழன்தான் ஆள வேணடும் என்று பல கட்சிகளில் குரல்கள் ஒலிக்கின்றன. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இப்படிக் குரல் எழவில்லை. காரணம் அதற்கான தேவை அங்கில்லை. இங்கு இருக்கிறது. வேற்று மொழி ஆதிக்கம் பருந்து போல தலைக்கு மேல் வட்டமடிக்கிறது. தமிழ் மொழியையோ கோழிக்குஞ்சுகளைப் போல காப்பாற்ற வேண்டியிருக்கிறது’ என்று பேச்சை துவக்கினார்.

இன்று தமிழை வளர்ப்பதை விட முதலில் தமிழைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. காரணம் தமிழன் தமிழனாக இல்லை. எனவேதான் தமிழில் கையெழுத்து போடுங்கள் என்று இப்படிக் கேட்க வேண்டியிருக்கிறது. தமிழில் கையெழுத்து போடுங்கள் என்று கேட்கிற இப்படிப்பட்ட நிலைக்கு வருத்தமாகவும் இருக்கிறது.

இன்று மருந்தும் செல்போனும் அத்தியாவசியமாகிவிட்டன. இந்த இரண்டும் கேடு தருபவை. மருந்தை மையப்படுத்தி எடுத்துள்ள இப்படம் வெற்றி பெற வேண்டும்” என்று அவர் பேசினார்.

காசோலையிலும் தமிழ் கையெழுத்து

இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது, “தமிழில் தான் எப்போதும் நான் கையெழுத்து போடுவேன். காசோகளிலும் கூடத் தமிழில் தான் கையெழுத்து போடுவேன் ஆனால் தமிழில் கையெழுத்து போடுவதால் தமிழ் வளர்ந்து விடுமா? நான் சைனா போனபோது அங்கு ஆங்கிலமே இல்லாமல இருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றிலும் முன்னேறித்தான் இருக்கிறார்கள். ஆங்கிலம் பேசும் ஆட்களைத் தேடிப் பிடிகக வேண்டும் .நான் அங்கு போயிருந்த போது தகவல் தொடர்புக்கு சிரமமாக இருந்தது. அண்மையில் ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்கு கம்போடியா போக வேண்டியிருந்தது. அப்படிப்போன போது அங்கு அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் நான் பாதியிலேயே ஊர் திரும்ப வேண்டியிருந்தது’ என்று வேதனையோடு கூறினார்.

என் பாஸ்போர்ட்டில சீல் போட இடமில்லை என்பதுதான் பிரச்சினை. அது மட்டுமல்ல விமான நிலையத்தில் என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள். சில நாடுகளில் தெரிந்தும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள் இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன. தமிழைக் காப்பாற்ற அரசியல்பூர்வமான நடவடிக்கைகள் வந்தால்தான் முடியும்’’ என்றார்.

மூலப் பொருட்கள் தவறான மருந்து

நாயகனும், தயாரிப்பாளருமான நேதாஜி பிரபு பேசும் போது ,

” நான் சினிமா எடுப்பது என்று முடிவு செய்தவுடன் புதிதாக ஏதாவது கதை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். 2013-ல் ஒரு மருந்து அதிலுள்ள மூலப்பொருள்கள் தவறானது என்று செய்திகள் வந்தன. அம்மருந்து தடை செய்யப்பட்டது. சில காலம் கழித்து அதே மருந்து தடை நீக்கம் செய்யப்பட்டது என விளம்பரம் வந்தது. இடையில என்ன நடந்தது? இது பற்றி யோசித்தேன் இக்கதை உருவாகியது என்றார்.

இது பற்றிய விழிப்புணர்வு இங்கு இல்லை. நாங்கள் இப்படத்துக்காக ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனியில் அனுமதி வாங்கி 8 நாட் ள் படமெடுத்துள்ளோம்’ என்றும் கூறினார்.

வந்திருந்தவர்களை மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன் வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *