செய்திகள்

கம்பம் மகளிர் கல்லூரியில் உடற்பயிற்சி ஆய்வுக் கூடம் திறப்பு

கம்பம், செப்.12–

கம்பம் மகளிர் கல்லூரியில் உடற்பயிற்சி ஆய்வுக் கூடம் திறக்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் உடற்பயிற்சி ஆய்வுக் கூடம் திறப்பு விழா நடந்தது.

இவ்விழாவிற்கு தலைமை வகித்து உடற்பயிற்சி ஆய்வுக் கூடத்தை கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என்.இராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்த உடற்பயிற்சிக் கூடத்தில் பல்வேறு வகையான உடற்பயிற்சி கருவிகள் மாணவிகளின் ஆரோக்கியத்திற்குப் பயன்படும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் கல்லூரி இணைச் செயலாளர் ஆர்.வசந்தன், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் வைஷ்ணவி வசந்தன்,கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.ரேணுகா, துணை முதல்வர் வி.வாணி,உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் திருவள்ளுவர் மின்னியல் நூலகர்கள் ராஜலட்சுமி, மோகனதேவி, கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் கல்லூரி அலுவலர்கள் பங்கேற்றனர். கல்லூரி கண்காணிப்பாளர் நந்தபால் விழாவிற்கான அனைத்து எற்பாடுகளையும் வெகு சிறப்பாக செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *