சினிமா போஸ்டர் செய்தி

கமல்ஹாசன் – ரஜினி இணைகிறார்களா?

Spread the love

மகள் அக்ஷரா கமல்ஹாசன் உருவாக்கும் சூப்பர் ஹீரோ படம்

 

 

 

 

 

சென்னை, ஜூலை 10

‘நான் ஒரு படம் இயக்க வேண்டும். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் அப்பா கமலை நடிக்க வைக்க வேண்டும். அவரை இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதுவே எனது பெரிய லட்சியம். என்று பிரபல நடிகையும் கமலஹாசனின் மகளும் ஆன அக்ஷரா ஹாசன் கூறி உள்ளார்.

‘சினிமாவில் அறிமுகமான நாளிலிருந்து இன்றைய தேதி வரை படங்களில் என் அப்பா ஏற்று நடிக்காத பாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம். இந்நிலையில் அவருக்கென்று ஒரு பாத்திரம் உருவாக்கினால் இதுவரை இல்லாத ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எது மாதிரி பாத்திரத்தை உருவாக்குவது என்பதில் நான் குழம்பிப் போயிருக்கிறேன்’.

‘அப்படியானால் சூப்பர் ஹீரோ கேரக்டர் படமாக இருக்குமா என்று கூட யோசிக்க வேண்டியிருக்கிறது அப்படி சூப்பர் ஹீரோ படம் ஒன்றை நான் உருவாக்கினால் அதில் அப்பாவை நடிக்க வைப்பதோடு, இயக்குவதோடு நிற்கமாட்டேன் அப்பாவோடு சேர்ந்து ரஜினி அங்கிளையும் நடிக்க வைத்து இயக்க வேண்டும் இரண்டு பேரும் ஒரே படத்தில் இணைய வேண்டும் என்பதும் என்னுடைய லட்சியம்’ என்றும் அவர் தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் இணைவார்களா என்பது ஒரு கேள்விக்குறி என்றாலும் இருவரையும் நடிக்க வைக்கும் ஒரு வைராக்கிய வெறியில் ஆக்கப் பூர்வமாக சிந்தித்து செயல்பட்டு வருகிறார் அக்ஷரா.

டைரக்ஷன் என்பது என்னுடைய தனியாத தாகம். சபாஷ் நாயுடுவில் அப்பா கமலஹாசனுடன் இணைந்து உதவி இயக்குனராக பணிபுரிந்த நான், இப்போது முழு நேரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் பாலிவுட்டில் இந்தி படத்தில் நடித்தாலும் அங்கிருக்கும் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஷாருக்கான், ரன்வீர் கபூர் ஆகியோரை நடிக்க வைத்து இயக்க வேண்டும் என்பதும் என்னுடைய ஆசை என்பதையும் அவர் தெரிவித்தார்.

பிரபல நடிகர் நாசருடைய மகன் அபிஹாசனுடன் இணைந்து ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்திருக்கிறேன் அதில் ஒரு கர்ப்பிணிப் பெண் வேடம் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் எப்படி நடிப்பது என்பதை என் அம்மா சரிகாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். கர்ப்பிணி வேடத்தில் நடிக்கப் போகும் முன் பல கேள்விகள் என்னிடம் இருந்தன. ஒவ்வொரு சந்தேகத்தையும் அம்மா தீர்த்து வைத்தார். அதுவும் பொறுமையாக எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

கர்ப்பிணி வேடத்தில் எப்படி நடப்பது, எப்படி உட்கார்வது வசனத்தை எப்படி சொல்லுவது என்று சொல்லிக் கொடுத்தார். அதோடு மட்டுமல்ல அடிவயிறு தொப்புளை சுற்றி துணியை கட்டி கர்ப்பவதி போல் தோற்றமளிக்க வைத்து இப்படி நட, அப்படி நட அப்படிப் பேசு என்று எனக்கு சொல்லிக் கொடுத்தது ஒரு புது அனுபவம். படத்தில் கர்ப்பிணி வேடத்தில் இருந்தாலும் சண்டைக் காட்சிகளிலும் நடித்து இருக்கிறேன் என்று சொன்னார் அக்ஷரா.

நடிக்கும் ஒவ்வொரு படமும் அறிமுகமாகும் முதல் படம் என்ற உணர்வில் நடிக்க வேண்டும். வீட்டிலும் அதற்கான ஹோம் ஒர்க் செய்து கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு செல்ல வேண்டும் என்று அப்பா கமலஹாசன் சொல்லி தருவதையும் நான் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று அனுபவமும் பேசினார் அக்ஷரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *