நாடும் நடப்பும்

கபில் சிபல் விலகல்: உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் நிலை பரிதாபம்


ஆர். முத்துக்குமார்


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் அக்கட்சியில் இருந்து மே 16 அன்றே விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனுவை கபில் சிபல் நேற்று தாக்கலும் செய்து விட்டார்.

காங்கிரஸ் மீது அதிருப்தி கொண்டு செயல்பட்டு வந்த மூத்த தலைவர்கள் அடங்கிய ஜி 23 குழுவில் கபில் சிபல் முக்கியப் பங்கு வகித்துவந்தார். இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்தே விலகி இருக்கிறார்.

இந்நிலையில் சமாஜ்வாதி ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அவர் மனு தாக்கல் செய்தார். அப்போது அகிலேஷ் யாதவும் உடன் இருந்தார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் பலமுறை பிரபல வழக்குகளில் ஆஜராகி, இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

மேலும் கபில் சிபலுக்கும் சமாஜ்வாதிக்கும் இடையே இதுவரை வழக்கறிஞர் என்ற முறையிலேயே தொடர்பு இருந்தது. அக்கட்சியின் மூத்த தலைவரான ஆசம் கான் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபல் தான் வாதாடி வந்தார். ஆசம் கானுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 111 எம்.எல்.ஏ.க்கள் சமாஜ்வாதிக்கு உள்ளனர். இவர்களின் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலை கபில் சிபல் எதிர்கொள்வதால் வெற்றி நிச்சயம் என்ற சூழல் உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கோ வெறும் இரண்டு மட்டுமே இருப்பதால் ஒரு எம்பி சீட்டை கூட வெல்லும் நிலைஅங்கு இல்லை.

தற்போது ராஜ்யசபாவில் உத்தரபிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர் கபில் சிபல் அவரது பதவிக்காலம் ஜூலையில் முடிவடைகிறது.

2024ல் நடைபெற இருக்கும் பாராளமன்ற தேர்தலில் பலர் ஒன்று கூடுகிறார்கள்…’ என்றும் மூத்த அரசியல் தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (UPCC) தலைவரை காங்கிரஸ் இன்னும் நியமிக்கவில்லை, அஜய் குமார் லல்லு சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதிலிருந்து அந்த பதவி காலியாக உள்ளது.கபில் சிபல்லுக்கு அப்பதவியை ஒரு வேளை தந்து இருந்தால் ஒரு முக்கிய தலைவர் வெளியேராமல் தடுத்து இருக்கலாம்.

1995 ல் மாயாவதி உத்தரப்பிரதேசத்தின் முதல் தலித் முதல்வராக பிஜேபி ஆதரவுடன் பதவியேற்றார்.

பிறகு 10 முதல்வர்கள் மற்றும் மூன்று ஜனாதிபதி ஆட்சிக்கு சாட்சியாக இருந்த காலகட்டம் உறுதியற்றதாக இருந்தது. முதல்வர்களில் ஒருவரான காங்கிரஸின் ஜகதாம்பிகா பால் (இப்போது மக்களவையில் பாஜக எம்பியாக இருக்கிறார்) 48 மணி நேரம் மட்டுமே நீடித்தார்.

சமீபமாக காங்கிரஸிலிருந்து வெளியேறிய மூன்றாவது முக்கிய நபர் சிபல் ஆவார்.

முன்னாள் பஞ்சாப் பிரிவுத் தலைவர் சுனில் ஜாகர் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த படிதார் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து….

காங்கிரஸை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு ஜாகர் பிஜேபியில் சேர்ந்தார், மேலும் படேலும் குங்குமப்பூ அணிவகுப்புக்கு மாறினார், இருப்பினும் அத்தகைய இணைப்புகளை உறுதிப்படுத்துவதில் அவர் மவுனம் சாதிக்கிறார்.

அண்மையில் குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் பதவியை ஹர்திக் படேல் ராஜினாமா செய்தார். அவர் பாஜகவில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் இது குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறும்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கடந்த 2017 முதல் 2021 வரை பதவி வகித்தவர் சுனில் ஜாக்கர். 2012 முதல் 2017 வரையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். கடந்த ஆண்டு பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து அமரிந்தர் சிங் விலகியபோது, இவருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சரண்ஜித் சிங் சன்னி முதல்வரானார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சுனில் ஜாக்கர் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

சமீபத்தில் இரண்டு பெரிய தலைகள் காங்கிரஸிலிருந்து விலகிய நிலையில் தற்போது மூத்த தலைவரான கபில் சிபலும் காங்கிரஸிலிருந்து விலகியிருக்கிறார்.


Leave a Reply

Your email address will not be published.