போஸ்டர் செய்தி

கன மழை வெள்ளத்துக்கு நாடு முழுவதும் 5 நாட்களில் 174 பேர் உயிரிழப்பு: கேரளாவில் மட்டும் 72 பேர் பலி

புதுடெல்லி,ஆக.12–

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி கடந்த 5 நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174 ஆகி உள்ளது.நேற்றைய நிலவரப்படி குஜராத்தில் 11 பேரும், கர்நாடகாவில் 7 பேரும் பலியாகி உள்ளனர். அதே சமயம் மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.கேரளாவில் மட்டும் இதுவரை கனமழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

2.47 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் 1639 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 35 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்வதற்காக கோஹல்பூரில் உள்ள முக்கியமான பஞ்சகங்கா பாலம் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மழை வெள்ளத்திற்கு 40 பேர் பலியாகி உள்ளதாகவும், மேலும் 14 பேரை காணவில்லை கூறப்படுகிறது.

கேரள மழை, வெள்ளத்தில் சிக்கி ஆகஸ்ட் 8 முதல் 11 வரை 72 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 58 பேர் மாயமாகி இருப்பதாகவும் கேரள மாநில பேரிடர் மீட்புப்படை நிர்வாகம் தெரிவித்துள்ளார். வெள்ளம் தொடர்பான சம்பவங்களால் 32 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *