செய்திகள்

கன மழை; குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Makkal Kural Official

திருவள்ளூர், அக். 15–

திருவள்ளூரில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

ஏரிகளின் நீர்வரத்து விவரம் பின்வருமாறு:–

புழல் ஏரிக்கான நீர்வரத்து நேற்று 196 கன அடியாக இருந்த நிலையில், இன்று 277 கன அடியாக அதிகரித்துள்ளது.

சோழவரம் ஏரிக்கு நேற்று நீர்வரத்து இல்லாத நிலையில் இன்று 160 கன அடியாக அதிகரித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து நேற்று 250 கன அடியாக இருந்த நிலையில் 260 கன அடியாக அதிகரித்துள்ளது.

பூண்டி ஏரிக்கான நீர்வரத்து 650 கன அடியாக அதிகரித்துள்ளது.

வீராணம் ஏரிக்கான நீர்வரத்து 1,423 கன அடியாக உயர்ந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *