செய்திகள்

கன்றுக் குட்டியை நெஞ்சோடு அணைக்கும் வினாயகர்: ஓவியக் கண்காட்சியில் பார்வையாளர்களை பேச வைத்த சிறுமி ஜஸ்மிதா

சென்னை, ஆக. 11

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் உள்ள ஆர்ட் ஹவுஸ்–சில் நடைபெற்ற ஓவிய கண்காட்சியில் 500கும் மேற்பட்ட குழந்தைகளின் ஓவியங்கள் வைக்கப்பட்டன, அதில் 11 வயது சிறுமி ஜஸ்மிதாவின் ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பொதுவாக விநாயகருடன் எலியை நாம் பார்த்திரிருக்கின்றோம். ஆனால் விநாயகர், கன்றுக்குட்டியை அணைத்து கொண்டிருப்பது போல் வித்தியாசமாக வரைந்திருகிறாள் ஜஸ்மிதா. சிறு வயது முதல் ஓவியங்கள் வரைவதில் மிகவும் ஆர்வம் கொண்டவள். யாருக்காவது பிறந்த நாள் என்றால் உடனே ஓவியம் தீட்டி வாழ்த்து அட்டை கொடுத்து விடுவாள். அலாதியான ஈடுபாட்டுடன் ஓவியங்கள் தீட்டுவாள்.

தங்கள் மகளின் ஆர்வத்தை புரிந்துகொண்ட பெற்றோர்கள், இவளை 4 வயதில் ஓவியப் பள்ளியில் சேர்த்து விட்டனர். 5 வருடங்களாக ஓவியம் பயின்று அற்புதமான ஓவியராக தன்னை வளர்த்து கொண்டு வருகிறாள். ஜஸ்மிதா செயின்ட் ஜோசப் கான்வென்டில் 7ம் வகுப்பு படித்து வருகிறாள். இவளது தாய் பிரியா பிரமீளா. தந்தை வெங்கட்ரத்னம்.

விரைவில் தான் வரைந்து வைத்த்திருக்கும் ஓவியங்களுடன் இன்னும் நிறைய ஓவியங்களை தீட்டி ஆர்ட் காலரி முழுவதும் வைக்கவேண்டும் என்பது அவரது ஆசை.

மேலும் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் என்று தமிழ் கலாச்சார கலைகளையும் கற்று வருகிறாள் ஜஸ்மிதா.

‘மழைத்துளிகள் 2019’ என்னும் தலைப்பில் நடந்தது கண்காட்சி. வெற்றி பெற்ற சிறுமிகளுக்கு பரிசு–சான்றிதழ்களை ஆர்ட் டைரக்டர் ஜாக்கியும், நடிகர் ஜார்ஜும் வழங்கினார்கள். எம்.எப்.ஏ. அமைப்பின் இயக்குனர் கே.ராஜவேல் ஏற்பாட்டில் நடந்த கண்காட்சி இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *