செய்திகள்

கன்னிவாடி முழுவதும் 15 வார்டுகளில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு

Spread the love

கன்னிவாடி முழுவதும் 15 வார்டுகளில்

கொரோனா வைரஸ் ஒழிப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது

சின்னாளபட்டி, மார்ச்.26–

கன்னிவாடி முழுவதும் 15 வார்டுகளில் கொரோனா வைரஸ் ஒழிப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. செயல் அலுவலர் ஓ.பாண்டீஸ்வரி தலைமையில் அனைத்து வார்டுகளுக்கும் சென்று தூய்மைப்பணிகள் கண்காணிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சியில் கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பேரூராட்சி நிர்வாகம சிறப்பாக செயல்படுத்தி பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறது.

கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் உள்ள தெருக்களில் கொரோனா வைரஸ் நோய் கிருமி நாசினி மருந்துகளை தூய்மை பணியாளர்கள் மூலம் அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயல் அலுவலர் ஓ.பாண்டீஸ்வரி தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள் அனைத்து வார்டுகளுக்கும் சென்று கிருமி நாசினி மருந்துகள் அடிப்பதை கண்காணித்து வருகின்றனர்.

கன்னிவாடியில் உள்ள பாரத ஸ்டேட் பேங்க், கோவில்கள், அங்கன்வாடி மையம் மற்றும் துவக்கப்பள்ளிகளுக்கு சென்று கிருமி நாசினிகளை அடித்து வருகின்றனர். அனைத்து தெருக்களுக்கும் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஆட்டோக்களில் செல்லும் தூய்மைப்பணியாளர்கள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர். இதுதவிர ஊருக்குள் நுழையும் அனைவரையும் கைகளை சுத்தம் செய்யவிட்டுதான் அனுப்புகின்றனர். கொரோனா வைரஸ் நோயை ஒழிப்பதில் தீவிரம் காட்டிவரும் கன்னவாடி பேரூராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *