செய்திகள்

கன்னிவாடியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி

கன்னிவாடியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி:

செயல் அலுவலர் ஆய்வு

 

சின்னாளபட்டி, மே.19–

கன்னிவாடி முழுவதும் 15 வார்டுகளில் கொரோனா வைரஸ் ஒழிப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. செயல் அலுவலர் பாண்டீஸ்வரி தலைமையில் அனைத்து வார்டுகளுக்கும் சென்று தூய்மைப்பணிகள் கண்காணிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சியில் கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பேரூராட்சி நிர்வாகம சிறப்பாக செயல்படுத்தி கொரனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தி பொதுமக்களின் பாராட்டை பெற்றது. நேற்று கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் உள்ள தெருக்களில் கொரோனா வைரஸ் நோய் கிருமி நாசினி மருந்துகளை தூய்மை பணியாளர்கள் இயந்திரம் மூலம் அடித்தனர் செயல் அலுவலர் ஓ.பாண்டீஸ்வரி தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள் அனைத்து வார்டுகளுக்கும் சென்று கிருமி நாசினி மருந்துகள் அடிப்பதை கண்காணித்து வருகின்றனர். கன்னிவாடியில் உள்ள பாரத ஸ்டேட் பேங்க், கோவில்கள், அங்கன்வாடி மையம் மற்றும் துவக்கப்பள்ளிகளுக்கு சென்று கிருமி நாசினிகளை அடிப்பதை பார்வையிட்ட செயல் அலுவலர் பாண்டீஸ்வரி பொதுமக்களிடம் கடைகளுக்கு செல்லும் போது சமூக விலகளை கடைபிடிக்க வேண்டுமென்று வேண்டுகோள்விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *