செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி செல்ல இரு மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை

Spread the love

கன்னியாகுமரி–திருவனந்தபுரம் இடையே

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி செல்ல இரு மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை

 

கன்னியாகுமரி, மார்ச்.26–

ஊரடங்கு உத்தரவையடுத்து கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு இடையே மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கொண்டு செல்வது குறித்து இரு மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை நடத்தினர்.

கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இரு மாவட்ட கலெக்டரும் மேற்கொண்டுள்ளனர். இதனால் மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல தடை ஏற்பட்டது. எனவே கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே, மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மாவட்ட எல்லைகளில் சந்தித்து இரு மாவட்டங்களுக்கிடையே மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கொண்டு செல்வது குறித்து ஆலோசனை செய்தார்கள்.

நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.என்.ஸ்ரீநாத் மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோகன் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *