கதைகள் சிறுகதை

கனவு மெய்ப்பட வேண்டும் – மு.வெ. சம்பத்

Makkal Kural Official

தனது தோழிகள் மேல் படிப்பிற்காக அவரவர் விரும்பிய துறைகளில் சேர்ந்தார்கள், மாலா தனது தந்தை மோகனிடம் தான் ஆட்டிசம் துறையில் படிக்க விரும்புவதாக் கூற, உனது தோழிகள் போன்று நீயும் படிக்கலாமே என்றார், வீட்டில் குணசீலன் ஆட்டிசத்தினால் அவதிப் படுகிறானே, அவனை குணப் படுத்தவா இந்தத் துறையை நீ விரும்புகிறாய் என்றார், உனது வாழ்க்கையை மேம்படுத்தும் துறையை எடுத்தால் என்ன என்று கூற, மாலாவின் பிடிவாதம் இறுதியில் வென்றது,

மிகவும் ஆர்வமாக படித்த மாலாவை ஆசிரியர் மருத்துவர் ஆனந்தன் உங்களுக்கு இவ்வளவு ஈடுபாடு ஏற்பட என்ன காரணம் என்று கேட்க, அவள் தயங்கி தயங்கி தனது தம்பியின் நிலைமை பற்றிக் கூறினார், ஆனந்தன் மாலாவிடம் அவனை அழைத்து வருமாறு கூறினார்,

தனது தந்தையின் உதவியுடன் குணசீலனை அழைத்து வந்தார் மாலா, குணசீலனை நன்கு சோதித்த ஆனந்தன் பாதிப்பு சதவீதம் குணப்படுத்தும் அளவில் தான் உள்ளது என்றார். நான் சொல்லும் முறைப்படி செய்தால் குணசீலன் நலம் பெறுவார் என்றார்.

உடனே மோகன் என் மகன் சமுதாயத்தில் எல்லோர் போன்று நடமாட முடியுமா? என்று கேட்டார், அதற்கு ஆனந்தன் அதிலென்ன சந்தேகம் என்றார், நீங்கள் எல்லோரும் குணசீலனிடம் அன்பாக நடக்க வேண்டும், வெறுப்புப் பேச்சு, கோபப் பார்வைகளை அவர் முன் செயல்படுத்தக் கூடாது என்றார், குணசீலனுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வருமாறு நடத்தலே மாற்றத்திற்கு அடிகோலும் என்றார்,

குணசீலனுக்கு பிடித்த உணவை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும் என்றார், குணசீலனுக்கு நிறைய பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்றார், மேற்படி இன்னும் சில நடவடிக்கைகள் மேற்கொண்டால் குணசீலன் எண்பது சதவீதம் குணமாவதற்கு சாத்திய கூறுகள் உள்ளன என்றார்.

பின் குணசீலன் சாதாரண மனிதன் போன்று நடமாடலாம் என்றார், எக்காரணம் கொண்டு குணசீலன் கோபப்படும் வகையில் செயல் தவிர்த்தால் அவர் இயல்பு நிலை மாறாமல் தொடர்வார் வாழ்க்கையை ஒரு நாள் அவரை கோபப்படுத்தினால் அவர் சீராக சில நாட்களாகும். அந்த சமயங்களில் அவர் செய்கைகள் மாறும், சொன்னதையே சொல்வார்,உணவு வழக்கம் மாறும், பழைய நிலையை அவர் அடைந்தாலும் சில நாட்கள் அவரை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டும் என்றார்.

குணசீலனுக்கு இயற்கை உபாதை பற்றி அறிய வைக்க நாம் மிகவும் பாடுபட வேண்டும் என்றார், குணசீலன் ஏதையாவது பற்றி யோசிக்க ஆரம்பித்தாலோ அல்லது சொன்னதை கேட்கும் நிலையில் வந்தால் நாம் அவருடன் இணைந்து அவர் விருப்பத்திற்கேற்ப செயல் பட்டால் நமது இலக்கை அடையலாம், அவர் ஏதாவது வித்தியாசமாக செய்தால் ஏன் இப்படி செய்கிறாய் என்று கடிந்து பேசாமல் அவர் எண்ணத்தை அறிய முற்படுங்கள் என்றார் ஆனந்தன்,

மாலா தனது அம்மாவிடம் குணசீலன் சம்பந்தமாக எல்லாமே நான் கவனித்துக் கொள்கிறேன். நீ கவலைப் படாதே என்றார், மாலா படிப்பை படிப்பதுடன் குணசீலனைக் கவனிவிப்பது என வேலைப்பளுவில் திணறினார், நாளாக நாளாக குணசீலன் ஆரோக்கியம் மேம்பட மாலா இன்னும் தீவிரமாக கவனிக்க ஆரம்பித்தார். இடையிடையே ஆனந்தனிடம் கூட்டிச் சென்று பரிசோதனைகள் மேற்கொண்டார்கள், ஆனந்தன் மிகவும் மகிழ்வாய் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார்,

இனி பேச்சுப் பயிற்சி அளிக்கலாம் என்றார், அடுத்த தொடர்ந்து கொடுத்த பேச்சுப் பயிற்சியினால் எண்பது சதவீதம் முன்னேற்றம் ஏற்பட்டு குணசீலன் பேசுவதை அடுத்தவர் அறிய முடிகிறது.

நாம் எல்லோரும் பேசுவது போன்று வேகமாக பேச முடியாவிட்டாலும் பேச்சு குழறாமல் இருந்தது கண்டு எல்லோரும் ஆனந்தம் அடைந்தார்கள், நடைப்பயிற்சி மூலம் சற்று வேகமாக நடக்க குணசீலனுக்கு பழக்கம் ஏற்பட்டது, ஆனாலும் சில சமயங்களில் வித்தியாசமான முறையில் குணசீலன் செய்கை மேற்கொள்வதை தடுக்க முடியாமல் போனது, மருத்துவர் இது காலப் போக்கில் பல மனிதர்களுடன் பழகும் போது மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்றார், மாலாவிடம் மோகன் நீ என் மகள் மட்டுமல்ல, குடும்பத்தை நிலை நிறுத்த வந்த தேவதை என்றார்,

அன்று மாலாவின் கடைசி வருடத்தேர்வு முடிவு வந்தது;

மாலா முதல் மாணவியாக வந்தார், ஆனந்தன் மாலாவை பாராட்டி விட்டு நீ மேற்கொண்டு படிப்பை தொடர்ந்தால் நன்றாக வருவாய், உன்னால் நிறைய பேர்கள் அசாதாரண நிலையில் இருந்து நல்லநிலைக்கு வருவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்றார், மாலா உங்கள் ஊக்கத்திற்கு நன்றி என்றார்,

வீட்டிற்கு வந்து தந்தையிடம் தனது முதல் மாணவியாக தேர்ச்சியடைந்தது பற்றி கூறிய மாலாவை பாராட்டினார் மோகன். அப்போது குணசீலன் வாழ்த்துக்கள் அக்கா என்றதும் மாலா குணசீலனைக் கட்டிப் பிடித்து ஆனந்தம் அடைந்தார்,

மேற்கொண்டு படிப்பதைப் பற்றி மாலா தந்தையிடம் கூற, மோகன் உனது விருப்பம் என்றார்,

அப்போது மாலாவின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வர மாலா பேசினார், எதிர் திசையில் மருத்துவர் ஆனந்தன் நம் குணசீலனுக்கு தெரிந்த இடத்தில் வேலைக்குச் சொல்லியதாகவும் நாளை அவரை அழைத்துச் செல்லுமாறு கூறினார். விலாசம் கூறினார். மாலா குறித்துக் கொண்டு நன்றி சொல்லி இணைப்பைத் துண்டித்தார்,

தந்தை மோகன் குணசீலனிடம் வேலைக்குப் போகிறாயா என்றதும் குணசீலன் செல்கிறேன், வேறு உலகத்தைப் பார்க்கிறேன் என்றதும் மாலா அடைந்த மகிழ்வுக்கு எல்லையே இல்லையெனலாம்,

மாலா குணசீலனுக்கு அலுவலக நடைமுறைகள் குறித்து சில வழிமுறைகளைக் கூறினார்,

குணசீலன் வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதங்கள் கடந்தன, அவர் பணியில் சிறப்பாக செயல்படுவதாக செய்திகள் வந்தது கண்டு மோகன்உட்பட எல்லோரும் ஆனந்தமடைந்தார்கள், அலுவலகத்தில் விநோதினி மிகவும் அக்கறையாக குணசீலனை கவனித்துக் கொண்டார், குணசீலன் பொது வாழ்வில் நன்கு பழக கற்றுக் கொண்டார், நாள்தோறும் விநோதினி குணசீலனுக்கு உலக வாழ்வியல் பற்றி கற்றுத் தந்தார்,

அன்று வீட்டிற்கு வந்த நபர் தான் மருத்துவர் ஆனந்தன் சொன்னதின் பேரில் வந்ததாகக் கூறினார், தனது பெயர் சரவணண் என்றும் தனது மகன் மதிமாறனுக்கு திருமண ஏற்பாடு செய்கின்றதாகவும் உங்களது பெண் மாலாவைப் பற்றி மருத்துவர் நிறையவே சொல்லியுள்ளார் என்றார், அடுத்த இரு வீட்டார் நடவடிக்கைகள் மூலம் மதிமாறன் மாலா திருமணம் நடந்தேறியது,

புகுந்த வீட்டிற்கு வந்த மாலாவிற்கு மதிமாறன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நல்ல மரியாதை தந்தார்கள், ஒரு வாரம் கழித்து மதிமாறன் தங்கை அமிர்தா வீட்டிற்கு வந்த மாலா அங்கு படுக்கையில் படுத்திருந்த சிறிய பெண்ணைக் கண்டதும் பதறினார், அவர் அருகில் சென்று பார்த்தவுடன் இந்தப் பெண்ணும் ஆர்ட்டிசம் பாதிப்பில் உள்ளதை உணர்ந்தார், அந்தப் பெண்ணின் தலையை வருடி விட்டு சிறிது நேரம் அவரை ஆராய்ந்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார், அமிர்தா தன்னைக் கட்டுப் படுத்த முடியாமல் அழுதார், மாலா அவரை சமாதானப் படுத்தினார்,

மறு நாள் காலை தனது மாமியாரிடம் பேசினார், அமிர்தாவின் பெண் சுபாவை இங்கு அழைத்து வந்தார், தனது கணவர் உதவியுடன் மருத்துவர் ஆனந்தனைச் சந்தித்தார்,அவர் பரிசோதனை செய்து விட்டு சீக்கிரம் குணப்படத்தலாம் என்றார், மாலாவின் முயற்சி நிச்சயம் வெற்றியைத் தரும் என்றார். சில அறிவுரைகளுக்குப் பின் விடைபெற்றார்கள் மதிமாறன் மற்றும் மாலா, அடுத்த சில மாதங்களில் மாலாவின் தொடர்ந்த கவனிப்பால் சுபா மெல்ல மெல்ல ஆரோக்கியம் மேம்பட்டார்,

அன்று மருத்துவரிடம் சுபாவை அழைத்துக் சென்றால் மாலா, மருத்துவர் பரிசோதித்து விட்டு நல்ல முன்னேற்றம் என்றார்.

இன்னும் சில மாதங்களில் குணசீலனுக்கு செய்த பயிற்சிகள் மேற்கொண்டால் சுபாவும் சாதாரண மனிதர்கள் போல் ஆகி விடுவார் என்றார். ஆனால் எண்பது சதவீதம் தான் குணப்படுத்த முடியும் என்றார். மாலாவின் தந்தை மோகன் மதிமாறன் அழைப்பின் பேரில் வந்திருந்தார்,

மாலாவின் சேவையைக் கண்டவர் இதற்காகத் தான் இந்தத் துறை படிப்பை படித்தாயா, தொடருகிறதே உனது கடின உழைப்பு என்றதும் மாலா அப்பா இது இறைவன் கொடுத்த பணி, ஏதும் வருந்தாதீர்கள் என்றார்.

அடுத்த சில மாதங்களில் சுபாவின் செயல்பாடுகள் கண்டு அமிர்தா அசந்தே போய் விட்டார், நன்கு தேறி தான் எதிர் பார்த்ததை விட சுபா எல்லோரிடமும் பழகுவது கண்டு அண்ணி நீங்கள் இந்த வீட்டிற்கு விளக்கு மட்டும் ஏற்ற வரவில்லை. எனது மகளின் வாழ்வை சிறக்க வைக்கவே வந்துள்ளீர்கள் என்றார் அமிர்தா, அடுத்த வாரமே சுபாவை பள்ளியில் சேர்த்தார்கள், மாலாவின் கனவு இப்படியே வாழ்வில் கரைந்து விடுமா என மோகனிடம் குணசீலன் சொன்னார்,

மதிமாறன் அன்று மாலாவிடம் நான் இன்று அலுவலகம் செல்லவில்லை, ஒரு முக்கியமான பணியாக செல்கிறேன்; வந்து சொல்கிறேன் என்று கூறி சென்றார்.

#trending news #trending news tamil #makkalkural #மக்கள்குரல் #சென்னை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *